பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.

{7) விறன்மிண்ட நாயஞர்

சேரரது மலைநாட்டிலே திருச்செங்குன்றுாரில் வேளாளர் மரபில் தோன்றியவர் விறல்மிண்டர். சிவனடி யார் பெருமையைப் பேணும் நோக்குடைய இவர் திருவாரூரையடைந்து சிவனடியார்களுடன் தேவாசிரிய மண்டபத்தில் தங்கி ஆரூர்ப் பெ ரு மா னை வழி பட்டிருந்தார். பரவையார் கணவராகிய சுந்தரமூர்த்தி நாயனர் புற்றிடங்கொண்ட பெருமான வழிபடத் திருக் கோயிலில் நுழைபவர் தேவாசிரிய மண்டபத்திலுள்ள சிவனடியார்களை முதலில் வழிபடாது ஒருபுறமாக ஒதுங்கிச் சென்ருர், அதனேக் கண்ணுற்ற விறன் மிண்ட நாயனர், 'சிவனடியார் திருக்கூட்டத்தை வழி படாது செல்லும் வன்ருெண்டனும் அவனுக்கு அருள் செய்யும் ஆரூர் இறைவரும் அடியார்களுக்குப் புறகு’ என வெகுண்டுரைத்தார். அந்நிலையிற் புற்றிடங் கொண்ட பெருமான் வன்ருெண்டர்க்கு எதிரே தோன்றித் திருத்தொண்டர் பெருமையை விரித்துக் கூறித் தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடி யெடுத்துக் கொடுத்தருள நம்பியாரூரரும் திருத் தொண்டத்தொகைத் திருப்பதிகத்தினைப் பாடிக்கொண்டு சிவனடியார்களைப் போற்றிப் பரவினர். அதனை உளங் குளிரக் கேட்டு விறன்மிண்ட நாயனர் ஆரூர் இறை வரையும் நம்பியாரூரரையும் உவந்து போற்றினர்: இவ்வாறு அடியார் பெருமையினே உலகறியச் செய்த விறன்மிண்ட நாயனர் சிவகணத்தலைவர்களுள் ஒருவராகத் திகழும் பேறு பெற்ருர்.

(8) அமர்நீதி காயஞர்

சோழநாட்டில் பழையாறை என்னும் நகரத்திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் அமர்நீதியார்: இவர் வணிகத் தொழிலாற் பெருஞ்செல்வம் ஈட்டியவர்: சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து அவர் கட்குப் போர்வையும் கோவணமும் அளிக்கும் தொண்