பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8

அழைக்கப்பெற்ருர், கருவூர்த் திருவானிலைத் திருக் கோயிற்பெருமானுக்குப் பூத்தொண்டு புரியும் சிவகாமி யாண்டார் என்பவர் வைகறையில் திருநந்தன. வனத்திற்குச் சென்று மலர் கொய்து பூக்குடலேயில், நிறைத்து அக்குடலேயினத் தண்டின்மேல் உயரப் பிடித்துக்கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து சென்ருர். மகாநவமியின் முதல் நாளான அன்று அந் நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்ச்சோழரது பட்டத்து யானே ஆற்றில் நீராடிப் பாகர்க்கு அடங்காது. மதச்செருக்குடன் திரும்பும்போது சிவகாமியாண்டார் கையிலுள்ள பூக்குடலையைப் பறித்துச் சிதறியது. பாகர், யானையை விரைந்து ஒட்டிச் சென்றனர். பூக்குடலே சிதறினமையால் சிவகாமியாண்டார் சிவ தா சிவதா என்று ஒலமிட்டு அரற்றினர். அவ்வொலி யினைக் கேட்டு அங்கு ஓடிவந்த எறிபத்தர் வெகுண்டு விரைக்தோடி யானேயையும் பாகர் ஐவரையும் மழுப்படை. யாற் கொன்று வீழ்த்தினர். பட்டத்து ய னேயும் பர்கரும் இறந்துபட்ட செய்தியைக் கேள்விப்பட்ட புகழ்ச்சோழர் பகைவர் செயலோ இதுவென ஐயுற்றுப் படையுடன் புறப்பட்டார். யானையும் பாகரும் இறந்து கிடக்கும் இடத்தில் சிவனடியார் ஒருவர் மட்டுமே மழுப்படையினத் தாங்கி நிற்றலைக் க்ண்டார் . 'சிவனடியாராகிய இவர், குற்றஞ்செய்தாலல்லது பாகர் முதலியோரைக் கொன்றிருக்க மாட்டார். ஏதோ இங்குத் தவறு நடந்திருத்தல் வேண்டும் எனக் கருதி எறி பத்தரை அணுகினர். அவர் நிகழ்ந்தது கூறக் கேட்டு, ‘ஐயனே, யானையும் பாகரும் செய்த குற்றத்துக்கு யானும் பொறுப்புடையேன். ஆதலின் என்னையும் இவ்வாளிற்ை. கொல்லுதல்வேண்டும்’ எனக் கூறித் தமது உடைவாளை எறிபத்தர் கையிற் கொடுத்தார். அதனே வாங்கிக் கொண்ட எறிபத்தர் அரசரது பேரன்பின் திறத்தினை யெண்ணி அவரது உள்ளம் வருந்த நடந்துகொண்ட மைக்குப் பெரிதும் வருந்தி அவரிடமிருந்து தாம்