பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

அம்மலைமேல் குடுமித்தேவர் இருப்பர், கும்பிடலாம் என்ருன் நாணன். அவனுடன் மலைமீதேறிக் குடுமித், தே வ.ரா கி ய சிவலிங்கப்பெருமானேக் கண்டு ஆரா அன்புடன் ஒடிச் சென்று தழுவிக்கொண்டார். இறை. வரது அருள் நோக்கால் திண்ணணுர் அன்பே வடிவமாய் இறைவரைப் பிரிய மனமில்லாதவராய் அவர்க்கு இறைச்சி கொண்டுவரவெண்ணி மலையினின்றும் இறங்கினர். காடன் கொத்தி வைத்திருந்த பன்றியிறைச்சியைத் தீயிலிட்டுக் காய்ச்சிப் பல்லில் அதுக்கிச் சுவையும் பதமும் அறிந்து அதனைத் தொன்னேயில் நிரப்பி ஒரு கையில் எடுத்துக்கொண்டார். வில்லை மற்ருெரு கையில் ஏந்தி இறைவனுக்குச் சாத்தும் பூவினைத் தம் தலையிலும் திருமஞ்சன நீரினைத் தமது வாயிலும் கொண்டு மலையின்மீதேறிச் சென்று, காளத்திநாதர் முடிமீது அணியப்பெற்றிருந்த பச்சிலைகளைச் செருப் பணிந்த கால்களால் விருப்புறத் தள்ளித் தமது வாயிற் கொண்டுவந்த நீரை இறைவனுக்குத் திருமஞ்சனமாக ஆட்டித் தம் தலையிற்கொண்ட மலர்களை இறை வர்க்குச் சாத்திப் பன்றியிறைச்சியினைத் திருவமுதாகப் படைத்து மகிழ்ந்தார்.

பெற்ருேர் அழைக்கவும் செல்லாது காளத்தி யிறைவர்பாற் பேரன்புடையராய திண்ணனர் காலேயிற். சென்று வேட்டையாடிக் கொணர்ந்த இறைச்சியை இறை. வர்க்குப் படைத்தலேயும் இரவெல்லாம் இறைவரைக் காத்து நிற்றலேயும் தமது கடமையாகக் கொண்டார். ஆகம நெறியில் இறைவரை நாடொறும் பூசை செய்யும் சிவகோசரியார் இறைவனருகே பன்றியிறைச்சியும் நாயடி யும் எங்கும் பரவியிருத்தலைக் கண்டு வருந்தித் துரய்மை செய்து தம் பூசையை நிறைவேற்றி வந்தார், நாள்கள் ஐந்தாயின. ஆரும் நாளில் திண்ணனரது பேரன்பின் திறத்தைச் சிவகோசரியார்க்கு அறிவுறுத்தத் திருவுள்ங். கொண்ட காளத்தியிறைவர் தமது வலக்கண்ணில்,