பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பிணித்திழுத்து நிமிரச் செய்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அடியார் திருக்கூட்டத்துடன் திருக் கடவூர் இறைவரை வழிபட வந்தபொழுது அவ்விரு பெருமக்களுக்கும் தம்மில்லத்தில் திருவமுது செய்வித்து மகிழும் பேறு பெற்ருர்.

{13) மானக்கஞ்சாற காயகுர்

கஞ்சாறு என்ற ஊரில் தோன்றியவர் மானக் கஞ்சாறர். (இக்காலத்து இவ்வூர் ஆனதாண்டவபுரம் என வழங்கப்படுகிறது). கஞ்சாற நாயனர்க்கு ஒரே பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் மணப்பருவம் எய்திய நிலையில் ஏயர்கோன் கலிக்கா மஞர்க்குத் திருமணம் செய்து கொடுப்பதாக உறுதி செய்யப்பெற்றது. திருமண நாளில் சிவபெருமான் மாவிரதக் கோலமுடைய அடியாராக அங்கு எழுந்தருளினர். மர்னக்கஞ்சாறர் தம் மசளே அடியாரை வழிபடச் செய்தார். மணப்பெண்ணின் நீண்ட கூந்தலைக் கண்டு வியந்த மா விரதியார் இது நமது பஞ்சவடிக்கு ஆகும்’ என்ருர். அதுகேட்ட கஞ்சாறர் தம் மகள் கூந்தலை அ ரி ந் து அவரிடம் கொடுத்தார். அடியார் மறைந்து சென்ருர். இறை வரது திருவருளால் மணமகட்கு முன்போல் கூந்தல் வளர்ந்தது. மணமகளுர் ஏயர்கோன் கலிக்காமர் இச் செய்தியைக் கேட்டு வியந்து மானக்கஞ்சாறர் மகளே மணந்துகொண்டார். நாயனர் சிவபெருமான் திரு வருளால் பேரின்ப நிலை பெற்ருர்,

(14) அரிவாட்டாய நாயஞர்

சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்துள் தோன்றியவர் தாயனர் இவர் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகிய இவற்றைச் சிவபெருமானுக்குத் திருவமுது செய்வித்தலைக் கடமை யாகக் கொண்டிருந்தார். தாயனர் வறுமைக் காலத்தும் கூலிக்கு நெல்லறுத்துக் கிடைத்த செந்நெல் எல்லாம்