பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

சிவனுக்குரியதென்று திருவமுது செய்வித்தார். தாயஞர் செந்நெலரிசி செங்கீரை மாவடு இவற்றைக் கூடையிற் சுமந்தவராய்த் தம் மனைவியார் இறைவனது திருமஞ் சனத்துக்கேற்ற பால் தயிர் முதலியன கொண்டு பின்னே வர முன்செல்பவர் கால் இடறிக் கீழே விழுந்தார். சிவ லுக்கு அமுதாகிய செந்நெல்லரிசி முதலியன வயல் வெடிப்பிற் சிதறி வீழ்ந்தன. இவற்றை இறைவன் அமுது செய்தருளும் பேறு பெற்றிலேனே என வருந்திய தாயனுள் தி மிது! கையிலுள்ள அரிவாளால் தமது கழுத்தினை அரிய முற்பட்டார். அந்நிலையில் அம்பலத் தாடும் அண்ணலாரது திருக்கையானது தாயரைது கையினைப் பற்றிக்கொள்ள இறைவன் மாவடுவினை அமுது செய்யும் நிலேயில் விடேல் விடேல் என்னும் ஒசை, வயல் வெடிப்பினின்றும் தோன்றியது. இறை: வனது அருட்பெருங்கருணையினை அஞ்சலி கூப்பி நின்று. தாயனர் இறைவனைப் பரவிப் போற்றினர். சிவபெரு. மானும் விடைமீது தோன்றித் தாயனர்க்கு அருள் புரிந்தார். இறைவர் அமுது செய்யப் பெற்றிலேன்' என்ற ஏக்கத்தால் தம் கழுத்தினே அரிவாள் பூட்டி அரிய முற்பட்டமையால் இவர் அரிவாள்தாயர்’ என அழைக்கப்பெற்ருர் .

(15) ஆளுய நாயஞர்

மேல்மழ நாட்டில் மங்கலம் என்னும் மூதூரிலே ஆயர் குலத்திலே தோன்றியவர் ஆளுயர். பசுநிரை களை மேய்க்குந் தொழிலினராய் வேய்ங்குழலூதும் இசைப்பயிற்சியில் வல்ல இவர், சிவனடியில் அன்பு மீதுார்ந்த சிந்தையுடன் இறைவனது திருவைந்தெழுத் தினை வேய்ங்குழலில் வைத்து வாசித்து எவ்வுயிரும் உளமுருக இசையமுதளித்தலேத் தமது பொழுது போக்காகக் கொண்டிருந்தார். கார்காலத்தில் ஒரு நாள் நிரை மேய்க்கச் சென்றவர் பொன்னிற மலர் களைப் பூத்துக் குலுங்கிய கொன்றை மரத்தினைக்