பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝5

கண்டு அதனருகே சென்று வேய்ங்குழலில் திருவைந்: தெழுத்தை ஆரோசையமரோ சைகளில் அமைத்து' வாசித்தார். ஆளுயர் வாசித்த இனிய குழலோசை கேட்டு நிற்பன நடப்பனவாகிய எவ்வுயிர்களும் தம்மை மறந்து அவ்விசைமயமாயின. அத்திருக்குழலிசையினைச் செவிமடுத்த சிவபெருமான் உமையம்மையாருடன் விடை மீதமர்ந்து விசும்பிலே தோன்றி அருட்காட்சியளித்து என்றும் நம் சிவலோகத்தில் இருந்து வேய்ங்குழலூத நம் பாலணேவாய் என்று அருளிச்செய்ய ஆயை நாயனரும் சிவபெருமான் மருங்கு அணேந்து இன்புற்றிருந்தார்.

(18) மூர்த்தி காயனர்

பாண்டி. நாட்டில் மதுரை மாநகரில் வணிகர் குடியிலே தோன்றியவர் மூர்த்தியார். உலகப்பற்றினை யறுத்து இறைவன் திருவடிகளேயே மெய்ப்பற்றெனப் பற்றிய இப்பெருந்தகையார் திருவாலவாய் இறைவர்க்கு நாள்தோறும் சந்தனம் அரைத்துத் தருதலைத் தமது சிந்தைக்கினிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்தார். அக்காலத்தில் வடுகக்கருநாடர் மன்னன் பாண்டி நாட்டினைக் கைப்பற்றி அந்நாட்டின் அரசன் ஆளுன் சமணசமயச் சார்புடைய அவன் சிவனடியார் தொ எண்டு கள் நிகழவொட்டாமல் இடர்கள் பல செய்து வந்தான். அந்நிலையிலும் மூர்த்தியார் இறைவனுக்குச் சந்தனம் அரைத்துத் தருதலாகிய அப்பணியைத் தடை யின்றிச் செய்துவந்தார். அதுகண்ட மன்னன் முடிவில் சந்தனக்கட்டை கிடைக்கா மல் தடைசெய்தனன், சந்தனக்கட்டை கிடைக்காவிட்டாலும் அரைக்கும் கைக்கு முட்டுப்பாடில்லை என்று எண்ணிய மூர்த்தியார் Հք ւDgif முழங்கையினைச் சந்தனக்கல்வில் வைத்துத் தேய்ப்பாராயினர். அந்நிலையில் ஆலவாயிறைவர் திரு. வருளால் அன்பனே உன் கையில் உதிரம் ஒழுகும்படி இதனைச் செய்யற்க. உன் பணிக்கு இடர் விளேத்த கொடுங்கோல் மன்னன் பெற்ற நாடு முழுதும்.