பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

நீ பெற்று இந்நாட்டின் துயர்துடைத்து உன் திருப்பணியைச் செய்து நமது சிவலோகத்தை அடைவாயாக’’ என்று அருள்வாக்கு எழுந்தது. அந்நாள் இரவில் கருநாடர் மன்னன் இறந்தான். அவனுக்கு மைந்தர் இல்லாமை யால் தக்க அரசர் ஒருவரைத் தேர்தெடுக்கப் பட்டத்து யானையைக் கண்கட்டி விடுத்தனர் அமைச்சர். அந்த யானை மதுரை நகர வீதிகளெல்லா ம் திரிந்து திருவால வாய்த் திருக்கோயிற்புறத்திலே நின்ற மூர்த்திய ரைத் தன்மேல் ஏற்றிக்கொண்டது. அமைச்சர்கள் மூர்த்தி யாரைப் பணிந்து அரசராகும்படி வேண்டினர். அதற் கிசைந்த மூர்த்தியாரும் திருநீறே அபிடேகப் பொரு ளாகவும் உருத்திராக்கமே அணிகலனுகவும் சடை முடியே முடியாகவும் கொண்டு மும்மையால் உலகாண்டு பாண்டி நாட்டின் தவவேந்தராக ஆட்சி புரிந்திருந்து பின்னர்ச் சிவபெரும ன் திருவடி நீழலிற் பிரியாதுடனுறை யும் பெருவாழ்வு பெற்ருர்,

(17) முருக காயஞர்

திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் முருக நாயனர். இவர் புகலூர் வர்த்தமானிச்சரத் திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு நாள் தோறும் காலை நண்பகல் மாலை ஆகிய மூன்று காலங் களிலும் பலவகை நறுமலர் மாலைகளைத் தொடுத்தணிந்து வழிபடும் இயல்புடையவர். இவருடைய திருமடத்திலே திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்கியிருந்தனர். திருஞானசம்பந்தர்க்கு நண்பராகிய முருக நாயனர் திரு நல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளே யார்க்கு நிகழ்ந்த திருமணத்திற் கலந்துகொண்டு அங்குத் தோன்றிய ஈறில் பெருஞ்சோதியிற் கலந்து இறைவன் திருவடிகளையடைந்தார்.

(18) உருத்திரபசுபதி நாயஞர்

சோழ நாட்டில் திருத்தலையூரில் வேதியர் குலத்தில் தோன்றியவர் உருத்திரபசுபதி நாயஞர். இவர் தாமரை