பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கோபுரத்தைத் தொழுது உள்ளே புகுந்தார். அம்பல வாணர் உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப் பட்டார். யாவரும் அவரைக் காணுதவராயினர் - நந்த ஞரது வினே மாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்க அந்தமிலா ஆனந்தப் பெருங் கூத்தர் அருள் புரிந்தார்.

{20} திருக்குறிப்புத்தொண்ட காய்ஞர்

தொண்டை நாட்டில் காஞ்சி மாநகரத்தில் வண்ணுர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்புத் தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து திருத்தொண்டு செய்யும் இயல்பினராதலால் திருக் குறிப்புத்தொண்டர் எனப் போற்றப்பெற்ருர். சிவனடி யார்களின் ஆடையின் அழுக்ககற்றித் தூய்மை செய்து கொடுத்தலைத் தமது பணியாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் சிவபெருமான் அடியார் திருவுருக்கொண்டு அழுக் கடைந்த கந்தையுடன் திருக்குறிப்புத் தொண்டரை அடைந்தார். 'யான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி உடுத்தற்குத் தகுதியில்லாத நிலையிலிருந்தாலும் உடம் பினே வருத்தும் குளிருக்குப் பயந்து இதனை விட முடியுரத நிலையில் உள்ளேன். இதனைத் துவைத்து உலர்த்தி மாலைப் பொழுதாவதற்கு முன் தருவீராயின் எடுத்துச் செல்லும் என்ருர், அவ்வாறே தருவதாகத் திருக் குறிப்புத்தொண்டர் அக் கந்தையாடையை வாங்கிச் சென்ருர். எதிர்பாராத நிலையில் மழை தொடங்கி விடாது பெய்தது. கந்தை உலராத நிலையில் அடியார் உடம்புக்கு ஊறு நேருமே என்று திருக்குறிப்புத்தொண்டர் கலக்கமுற்ருர். மாலைப்பொழுது வரவரச் செய்வதறி யாது துணி துவைக்கும் கற்பாறையில் தலையை மோதினர். அந்நிலையில் திருவேகம் தம் திருக்கையால் தடுத்துப் பிடித்தருளி உமையொருபாகராய்க் காட்சி நல்கிச் சிவபதத்தை அளித்தருளினர்.