பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.

மழுவினல் எறிந்தாய். இனி உனக்கு அடுத்த தந்தை நாம் என்று அருள்செய்தார். "நாம் குடும் மலர்களும் உ டுக்கும் ஆடைகளும் உண்ட பரிகலமும் உனக்கே யாகுக' என்று கூறிச் சண்டீசப்பதமும் தந்தருளிஞர். சண்டீசுவரபதத்தை யடைந்தமையால் இவர் சண்டேசுர நாயனர் எனப் போற்றப்பெறுகின்ருர்,

(22) திருநாவுக்கரசு நாயனர்

திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாண் மரபில் குறுக்கையர் குடியிலே புகழஞர்க்கும் மாதினி யார்க்கும் மகளாகத் திலகவதியார் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர்க்குத் தம்பியாராக மருள் நீக்கியார் தோன்றினர். திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் அரசர்க்குத் துனேயாகப் போர் மேற்சென்று போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார். தாய்தந்தையை யிழிந்து தளர்வுறும் தம்பியார் மருள் நீக்கியாரைக் காத்தற்பொருட்டுத் திலகவதியார் உயிர் தாங்கியிருந்தார். உலக நிலையாமையை யுணர்ந்த மருணிக்கியார் அறம் பல புரிந்து சமண சமயம் சார்ந்து தருமசேனர் என அழைக்கப்பெற்ருர். திருவதிகை வீரட்டானத்து இறைவனே வணங்கித் தொண்டு புரிந்திருந்த திலகவதியார் தம்பியைச் சமண சமயத். திணின்றும் மீட்டருளும்படி இறைவனே வேண்டிக் கொண்டார். இறைவரருளால் தருமசேனர்க்குச் சூலை நோய் தோன்றி வருத்தியது. சமணர்களின் மந்திர தந்திரங்களாலும் மருந்துகளாலும் அந்நோய் தீராமை யால் தருமசேனர் ஒருவரும் அறியாதபடி பாடலிபுத்தி ரத்தைச் சமணர் விட்டு நீங்கித் திருவதிகையடைந்து திலக வதியாரைப் பணிந்து அவர் அளித்த திருநீற்றை உருவார அணிந்து திருவதிகை வீரட்டானரை வணங் கினர். கூற்ருயினவாறு விலக்ககிலீர் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். சூலை நோய்