பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3f.

நீங்கியது. இறைவனும் திருநாவுக்கரசு என்று சிறப்புப் பெயர் அளித்தார்.

திருநாவுக்கரசர் சைவ சமயத்தைச் சார்ந்தமை யறிந்த சமணர்கள் தம் சமயம் அழியுமே என அஞ்சினர். அச்சமயத்தினை மேற்கொண்ட பல்ல:ெ

அரசனிடம் முறையிட்டனர். அவர்கள் சொற்கேட்ட பல்லவன் நாவுக்கரசரை நீற்றறையில் இடச்செய்தான் நீற்றறை, ஈசன் இணையடி நீழல் எனக் குளிர்ந்தது. நஞ்சு கலந்த பாற்சோற்றை ஊட்டுவித்தனர். நாவரசர்க்கு நஞ்சும் அமிழ்தாயிற்று. யானையைவிட்டு இடறச் செய். தனர். அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவது என்ற உறுதியுடனிருந்த நாவுக்கரசரை வனங்கிய யானை, பாகர் முதலியோரைக் கொன்று ஒடியது. இத்தனே இடையூறுகளிலும் தப்பிய நாவுக் கரசரைக் கல்லோடு பிணித்துக் கடலில் தள்ளினர். அஞ்செழுத்தோதிய நாவுக்கரசர்க்குக் கல்லே தெப்ப மாய் மிதக்கத் திருப்பாதிரிப்புலியூர் அருகே கரையேறிப் பெருமானை வ ண ங் கி ன ர். பின்பு திருப்பெண்ணு கடத்திற் சிவபெருமானே வேண்டிச் சூலமும் இட பமும் பொறிக்கப்பெற்ருர். தில்லையை வணங்கிச் சீ க ப் ப தி யி ல் ஆளுடைய பிள்ளையாரைக் கண்டு. நண்பு கொண்டு நல்லூரில் திருவடி சூட்டப்பெற்றர். திங்களூரில் அப்பூதியடிகள் இல்லத்தில், தங்கி அரவு தீண்டியிறந்த மூத்த திருநாவுக்கரசை உயிர் பெற்றெழச் செய்தருளினர். திருஞானசம்பந்தருடன் தலயாத்திரை செய்து பஞ்ச நாளில் திருவிழிமிழலையிற் படிக்காசு பெற்று அடியார்களே உண்பித்தார். தி ரு ம ைற க் காட்டில் மறைகளாற் பூசிக்கப்பெற்று அடைக்கப் பெற்றிருந்த திருக்கதவினைப் பதிகம் பாடித் திறப்பித் தார். பழையாறையில் சமணர்களால் வடதளி மறைக் கப்பட்டிருந்த நிலையில் உண்ணுநோன்பிருந்து அத் திருக்கோயிலை வெளிப்படுத்தினர். திருப்பைஞ்ஞ்லிக்குச்