பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G金

சித்தியா லே முதல்நாளே யுணர்ந்துகொண்ட பெரு, மிழலைக்குறும்பர் “நாளே அவர் கயிலையினையடையக் கண்ணின் கரிய மணியினை இழந்தார்போல இவ் வுலகில் வாழமாட்டேன்' என்று எண்ணி இன்றே யோகநெறியா ல் சிவன் தாள் சென்றட்ைவேன்' என்று சொல்லி நாற்கரணங்களும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு பிரமநாடியின் வழியே கருத்தைச் செலுத்தி யோக முயற்சியினலே பிரமரந்திரம் திறப்ப உடலினின்றும் பிரிந்து கயிலைப் பெருமான் திருவடியின அடைந்தார். -

(25) காரைக்காலம்மையார்

சோழநாட்டில் கடற்றுறைப் பட்டினங்களுள் ஒன்ருகிய காரைக்காலில் தனதத்தனர் என்ற வணிகர் குலத் தலைவர்க்குப் பெண்மகவு பிறந்தது. புனிதவதி என்னும் பெயருடைய அப்பெண் விளையாடும் பருவத்திலேயே சிவ பத்தியுடன் வளர்ந்தது. தனதத்தனர் தன் மகள் புனித வதியாரை நாகையில் வாழ்ந்த நிதிபதிமைந்தன் பரமதத் துணுக்குத் திருமணஞ்செய்து கொடுத்து அவர்கள் இருவரும் காரைக்காலில் தனி மனையில் வாழவும் பரமதத்தன் தனக்குரிய வணிகம் புரிந் துவ்ளம் பெறவும் வசதி செய்திருந்தார். ஒரு நாள் பரமதத்தனைக் காண வந்தோர் அவனிடம் மாங்கனிகள் இரண்டனைக் கொடுத்தார்கள். அவன் அவ்விரண்டனையும் வீட்டிற்கு, அனுப்பிவைத்தான். அந்நிலையில் சிவனடியார் ஒருவர் பசியால் வர அவரை யுண்பிக்க வேண்டிப் புனிதவதியார் ஒரு மாங்கனியைப் படைத்தார். அதன்பின் கண வர்ைக்கு அமுது படைக்கும் மற்ருெரு கனியைப் படைத் தார். அக்கணியின் இன்சுவையில் ஈடுபட்ட பரமதத்தன் இன்னும் ஒன்றுளது அதனேக் கொண்டுவந்திடுக என்ருன். கணவளுர்க்கு மாங்கனியில் ஏற்பட்ட ஆர்.