பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

வத்தைத் தடுக்க எண்ணுத புனித வதியார் உள்ளே சென்று இறைவனே வேண்டி அவனருளால் மற்ருெரு மாங் கனியைக் கொணர்ந்து கணவனுக்குப் படைத்தாள். அதன் அதிமதுரச் சுவையைப் பருகிய பரமதத்தன் 'இது முன்தந்த மாங்கனியன்று; இதனை வேறு எங்குப்

பெற்றது? என வினவினன். அது கேட்ட புனிதவதி. யார் நடந்தபடி சொல்லுவதே முறையென்று நிகழ்ந்ததைக் கூறினர். இக்கனி இறையருளாற் பெற்றதாகுல் இது போல் இன்னுமொரு கனி பெற்றுத் தருக’ என்ருன் பரம தத்தன். புனிதவதியாரும் இறைவனை வேண்டி இன்னும் ஒரு கனி அளித்திலிராயின் என்னுரை பொய்யா ட்விடுமே வருந்தினர். இறையருளால் மற்றுமொரு மாங்கனி பெற்றுக் கணவன் கையிற் கொடுக்க அது உண்ணப் புகுமுன் மறைந்துவிட்டது. அது கண்டு அதிசயித்த பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வமென ای ஞ்சி கடல் கடந்து வெளிநாடு சென்று பொருளிட்டி வருவ தாகக் கூறிப் பிரிந்து சென்றன். பொருளிட்டி மற்ருெரு. பெண்ணை மணந்து பாண்டி நாட்டுக் கடற்றுறைப் பட்டினமொன்றில் வாழ்ந்திருந்தான். இச்செய்தியைக் கேள்வியுற்ற தனதத்தனர் தம் மகளார் புனித்வதி யாரைப் பரமதத்தன் இருக்கும். ஊர்க்குப் பெரியவர் துணையுடன் அனுப்பிவைத்தார். புனிதவதியர் வரு கையை யறிந்த பரமதத்தன்தானும் இரண்டாந்தார மாக மணந்துகொண்ட மனயோடும் அவள் பெற்ற பெண் குழந்தையோடும் வந்து எதிர்கொண்டு வணங் கினன். அது கண்ட புனிதவதியார் இறைவனருளால் அற்புதத் திருவந்தாதி பாடித் தம் உடலின் தசை யினை யுதறி என்புடம்பு தாங்கிப் பேயுருவமுடையராய், த்லை. யாலே நடந்து திருக்கயிலையை அடைந்தார். கயிலைப்பெரு மான் இவரைக் கண்டு அம்மையே என அழைத்தார். அம்மையாரும் அப்பா என்று அன்பிற்ை பணிந்து