பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

ஆர்கோனையும் ஒன்றுபடுத்தத் திருவுளங்கொண்ட சிவ பெருமான் கலிக்காமர்க்குச் சூலை நோய்வருமாறு செய்து கலிக்காமரிடம் சென்று இந்நோய் வன்ருெண்டன் வந்தால் நீங்கும் என்று கூறி வன்ருெண்டரை ஏயர் சோனுக்குற்ற நோயைத் தீர்க்கும்படி அனுப்பியருளினர். தமது சூலை நோயை நீக்க வன்ருெண்டர் வருவதனை யறிந்த கலிக்காமர் அவரால் நோய் தீர்வதிலும் தாம் இறத்தலே நன்றென்று, உடைவாளால் தமது வயிற்றைக் கிழித்து உயிர் துறந்தார். அந்நிலையில் அங்கு வந்த வன்ருெண்டர் யானும் உயிர் துறப்பேன் என்று அவ்வுடைவாளை எடுத்தார். அப்போது கலிக் காமர் இறைவனருளால் உயிர் பெற்றெழுந்து அவ்வுடை வாளைப் பற்றிக்கொண்டு சுந்தரரது அன்பின் திறத்தை புணர்ந்து அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங் இஞர். சுந்தரரும் ஏயர்கோன் கலிக்கா மரும் திருப்புன் கூர் இறைவரைப் போற்றி ஆருயிர் நண்பராயினர்.

(31) திருமூல காயஞர்

திருக்கயிலாயத்தில் இறைவன் திருவருள் பெற்ற சிவயோகியாராகிய சித்தர்களில் ஒருவர் அகத்திய முனி வரைக் காணப் பொதியமலைக்குச் செல்ல விரும்பினர். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவி முத்தம் (காசி) , விந்தமலை, திருப்பருப்பதம், திருக் காளத்தி முதலிய தலங்களைப் பணிந்து திருவேகம்பப் பெருமானே இறைஞ்சித் தில்லையம்பலத்தில் திருக் கூத்துத் தரிசனங்கண்டு காவிரியில் நீராடி அதன் தென்கரையில் திருவாவடுதுறையினை யணுகி இறைவனே வழிபட்டார். அங்கிருந்து புறப்பட்டுக் காவிரிக்கரையை அடைந்தபோது பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த மூலன் என்னும் ஆயன் திடீரென இறந்தானுக, அவளுல் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனைச் சுற்றிக் கதறின.