பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை

சுந்தரமூர்த்தி நாயனர் பாடியருளிய திருத்தொண் டத் தொகைத் திருப்பதிகத்திற் போற்றப் பெறும் சிவ னடியார்களின் வரலாறுகளைத் திருநாரையூரிற் பொல் லாப் பிள்ளையார் அருள்பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலில் வகைப் படுத்திக் கூறினர். குன்றத்தூரில் தோன்றிச் சோழ மன்னனுக்கு அமைச்சராயிருந்த அருண்மொழித்தேவர் அவ்வரலாறுகளைத் திருத்தொண்டர் புராணமென்னும் வரலாற்றுக் காப்பியமாக விரித்துப் பத்திச் சுவை நிரம்பப் பாடியருளினர். சேக்கிழார் அருளிய இப் பெரியபுராணக் காப்பியத்தில் விரித்துரைக்கப் பெறும் அடியார் வரலாறுகளைச் சுருக்கிக் கூறும் முறையில் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் திருத்தொண்டர் புரர்ண சாரம் என்ற நூலே இயற்றியருளினர்,

மேற்கூறிய நூல்களாற் போற்றப் பெறும் திருத் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நூற்ருண்டுகளில் பல்வேறு குலங்களில் தோன்றிச் சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் இடையருப் பேரன்புடையவர்களாய்த் தத்தமக் கேற்ற தொழில்களைச் செய்து வாழ்ந்தவர்கள். இவர்களில் ஆதிசைவ அந்தணர் முதல் ஆதித்திராவிடர் வரை பல் வேறு குலத்தவர்களும் உள்ளார்கள். இவர்களிற் பெரும்பாலோர் மனேயற வாழ்க்கையில் மனே யாளுடன்