பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஒரு நாள் உணவுண்ண வந்த சாக்கியர் இன்று எம் பெருமானேக் கல்லால் எறிதற்கு மறந்துவிட்டேனே' என்று எழுந்து விரைந்தோடிச் சிவலிங்கத்தின்மேல் சிறு கல்லினே எறிந்தார். இறைவனை மறவாத பேரன் பினேயுடைய அவர்க்குச் சிவபெருமான் உமையம்மை யாருடன் விடைமேல் தோன்றிக் காட்சி கொடுத்துச் சிவ லோகத்தில் தம் பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை வழங்கியருளினர்.

..(38) சிறப்புலி காயஞர்

பொன்னி நாட்டில் திருஆக்கூரில் அந்தணர் குலத்திலே தோன்றியவர் சிறப்புலி நாயனர். இவர் சிவனடியார்பாற் பேரன்புடையராய் அவர்களை எதிர் கொண்டு வணங்கி இன்மொழி பகர்ந்து திருவமுது செய் வித்து அவர்கள் விரும்புவனவற்றைக் குறைவறக் கொடுத்து மகிழும் சீர்கொண்ட புகழ் வள்ளலாகச் சிறந்து விளங் கினர். இவர் திருவைந்தெழுத்தோதிச் சிவபெருமானக் குறித்துச் செய்தற்குரிய வேள்விகள் புரிந்து இடையருப் பேரன்பால் நல்லறங்கள் பல செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்து இன்புற்றர்.

(37) சிறுத்தொண்ட காயஞர்

சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத் திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ம ரு த் துவத் துறை யி லும் படைக்கலத்தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையராய்ப் பல்லவ மன்னனுக்குச் சேனபதியாய்ப் போர்முனையிற் பகையரசரைப் பொருது வென்று அரசனுல் நன்கு மதிக்கப்பெற்ருர் மன்னன் பொருட்டு வடபுலத்திற் படையுடன் சென்று வாதாவி நகரத்தை அழித்து அங்கிருந்து பல்வகை நன்மணி க்ளையும் யானை குதிரை முதலியவற்றையும் கைப் பற்றித் தம் வேந்தன்பாற் கொணர்ந்தார். இவரது களிற்றுரிமை ஆண்மையின மன்னன் வியந்து பாராட்டக்