பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

கேட்ட அமைச்சர்கள், ‘அரசே, இவர் சிவபெருமான்டால் பேரன்புடைய தொண்டராதலால் இவரைப் போரில் எதிர்க்க வல்லார் யாரும் இல்லை என்றனர். அதனேக் கேட்ட மன்னன் எம்பெருமான் அடியாரைப் போர்முனே யில் விட்டிருந்தேனே' என அஞ்சிப் பரஞ்சோதியா ரை நோக்கி இனி நீவிர் உமது விருப்பம்போல மெய்ம்மை புரி திருத்தொண்டு செய்வீராக’ என நிதிக்குவையினையும் நீடுவிருத்திகளையும் அளித்து விடை கொடுத்தனுப்பின்ை.

மன்னவன்பால் விடை பெற்ற பரஞ்சோதியார் தமது ஊராகிய திருச்செங்காட்டங்குடியினை யடைந்து கணபதிச் சரத்திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரை வழிபட்டுச் சிவநெறித்தொண்டுகளைச் செய்திருந்தார். திருவெண் காட்டு நங்கையாருடன் மனைவாழ்க்கையினை நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களைத் திருவமுது செய்த வித்துப் பின்பு தாம் உண்ணுதலை வழக்கமாகக் கொண் டார். அடியார்களுக்கு முன் மிகச்சிறியராய்ப் பணிந்து ஒழுகினமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப் பெற்ருர் சிறுத்தொண்டர்க்கு வெண்காட்டு நங்கைபால் சீராளதேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். ஐந்து வயதில் அவரைப் பள்ளியிற் கல்வி பயில வைத்தனர். அந்நீாளில் திருஞானசம்பந்தர் செங்காட்டங்குடிக்கு எழுந் தருளச் சிறுத்தொண்டர் அவரை எதிர்கொண்டுபோற்றினர். ஞானசம்பந்தர் கணபதிச்சரப்பெருமானைப் பாடிய திருப் பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாராட்டினர்.

சிறுத்தொண்டரது அடியார் பத்தியினே உலகமறியச் செய்யத் திருவுளங்கொண்ட கயிலைப்பெருமான் பயிரவ அடியார் வேடந்தாங்கிச் செங்காட்டங்குடியினை அடைந்து சிறுத்தொண்டர் மனையை வினவிய ைட ந் து தாம் கண் ப. தீ ச் சரத் தி ல் திருவாத்தியின் கீழ் இருப்பதாகச் சொல்லிச் சென்ருர் . சிவனடியாரைத் தேடிக் காணுது திரும்பிய சிறுத்தொண்டர் , வீட்டிலுள்ளார் சொல்ல ஆத்திமரத்தின்கீழமர்ந்திருந்த அடியா ரைக் கண்டு.