பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வணங்கினர். தமது இல்லத்தில் திருவமுது செய்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அன்புக்குரிய சிறுத் தொண்டரே, யாம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்போம். அதற்கு உரிய நாளும் இன்றே. நாம் உண்ணப்படுக்கும் பசு நரடசு. உண்பது அஞ்சு பிராயத்துள், உறுப்பில் மறுவில்லாதிருக்கவேண்டும். ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத் தாதை அரியத் தாய் பிடிக்கும்பொழுது தம்மில் மனமுவந்து குற்றமின்றி அமைத்த கறியினை யாம் இட்டு உ ண் பது. இது செய்தற்கரிய காரியம். உம்மாற் செய்யவொண்துை. என்று கூறிஞர். அது கேட்ட சிறுத்தொண்டர் அடியார் அமுது செய்வதாயின் எனக்கு யாதும் அரியதில்லை’ எனக் கூறி மனேயை அடைந்து அடியார் கூறியவற்றை மனைவியாரிடம் கூறி யாம் உய்ய நீ பெற்ற மகனே இங்கு அழைப்போம் என்ருர். அது கேட்ட மனைவியார் மைந் தனப் பள்ளியிற் சென்று அழைத்து வாரும் என்ருர். சிறுத்தொண்டரும் மைந்தனை அழைத்து வந்தார். இருவரும் ஒன்றுபட்ட உள்ளத்தினராய் உலகத்தார் அறியாதபடி காதல் மைந்தனைச் சிவனடியார்க்குக் கறி சமைத்து வேறு கறிகளும் சோறும் சமைத்துப் பயிரவக் கோலத்து அடியாரைத் திருவமுதுண்ண அழைத்து வந்து திருவமுது படைக்கும் வகை எவ்வாறு’ இrஇன் வினவினர். பயிரவ அடியாரும் இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒருசேரப் படைக்க எனப் புணித்தார். அவர்கூறியவண்ணம் வெண்காட்டு நங்கையார் பரி கலந்திருத்திப் பாவாடையில் ஏற்றிச் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். வந்த பயிரவர் சொன்னபடி பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கறியாக்கி வைத்திரோ என்ருர், தலையிறைச்சி அமுதுக்காகாது எனக் கழித்து விட்டோம் என்ருர், வெண்காட்டு நங்கையார். அதனைக் கேட்ட பயிரவர் அதுவுங்கூட நாம் உண்பது என்ருர். சிறுத்தொண்டாரும் மனைவியாரும் அதுகேட்டுத் திகைத் தனர். அப்போது சந்தனத்தாதியார். அந்தத் தலை