பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

அரசர் தன்னை வணங்கக் கண்டு அஞ்சிய வண்ணுன் 'யாரென்று அடியேனக் கருதியது அடியேன் அடித் தொழில் புரியும் வண்ணன்' என்ருன். அதுகேட்ட சேர மான் ‘அடியேன் அடிச்சேரன் , திருநீற்றின் அன்பர் திரு. வேடத்தை நினைப்பித்தீர். வருந்தாது செல்வீராக’ என அவ்வண்ணுனுக்குத் தேறுதலுரை பகர்ந்து அனுப்பினர்.

கூத்தப்பெருமானது எடுத்த திருப்பாதத்தினை நாள்தோறும் வழிபடுதலைத் தமக்குரிய கடமையாகக் கொண்டிருந்த சேரமான் பெருமாள் பூசை முடிவில் இறைவனது திருவடிச் சிலம்பொலியினைச் செவிகுளிரக் கேட்டு ம கி ழ் ந் தார். சிவனடியார்களுக்கு வரையாது வழங்கியும் சிவவேள்விகள் செய்தும் எவ்வுயிர்க்கும் நலஞ்செய்து வந்தார். தன்னே யாழிசையாற் பரவும் பாணபத்திரரது வறுமையைப் போக்கத் திருவுளங் கொண்ட மதுரைத் திருவாலவாய் இறைவர் 'மதிமவி புரிசை” எனத் தொடங்கும் திருமுகப்பாசுரம் எழுதிய ஓலைப் பாயிரத்தைப் பாணர் கையிற் கொடுத்தனுப்பினர். பாணர் தந்த திருமுகத்தைப் பெற்ற சேரமான் அவர் வேண்டும் பொருள்களே எடுத்துக்கொள்ளும்படி வேண்டி வேண்டும் பொருளைக் கொடுத்தனுப்பினர்.

கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் என்றும் போல் ஒருநாள் சிவபூசை செய்துகொண்டிருந்த போது பூசை முடிவில் கேட்டு இன்புறுவதாகிய சிலம் பொலியைக் கேட்கப்பெருது தம் உயிரைப் போக்கிக் கொள்ளத் தம் உடைவாளையுருவினர். அந் நிலை யி ல் கூத்தப்பெருமான் விரைந்து தமது திருவடிச்சிலம் பொலியை ஒலிப்பித்தருளினர். சேரனே, தில்லையிலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றியவுணர்வுடன் திருப்பதிகம் பாடி நம்மைப் பரவினன். அவன் பாடிய தீஞ்சுவைப்பாடலில் நாம் திளைத்திருந் தமையால் இங்கு நீ புரியும் வழிபாட்டிற்கு உரிய நேரத்தில் வரத் தாழ்த்தோம் எனத் தோன்றிய இறைவனது