பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

கவிக்கம்பர். இவர் தூங்கானைமாடத் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனைப் பணிந்து சிவனடியார் களுக்குத் திருவமுதளிக்கும் தொண்டினே ஆர்வமுடன் செய்து வந்தார். ஒருநாள் தம் மனேவியார் நீர் வார்க்க அடியார் திருவடிகளே விளக்கி வரும்போது முன் தம் வீட்டில் பணிசெய்தவர் பணியினை வெறுத்துச் சிவனடியாரான அவருடைய திருவடிகளையும் விளக்கப் புகுந்தார். அந் நி லே யி ல் தண்ணிர் வார்த்துவரும் இவருடைய மனைவியார் ‘இவர் நம் வீட்டிற் பணி செய்த வேலையாள் போலும் என எண்ணி நீர்வார்க்கத் தாமதித்து நின்ருர். அதனையுணர்ந்த க லிக்க ம் பர், மனைவியார் கையிலுள்ள த ண் ணிர்க் கரகத்தை. தாம் கைக்கொண்டு அவர் கையினை வாளால் தடிந்து தாமே அடியார் திருவடிகளை நீர்வார்த்து விளக்கி அடி யார் அமுதுசெய்தற்கு வேண்டுவன எல்லாம் ஆர்வமுடன் செய்து அடியார்களைத் திருவமுது செய்வித்தார். அடியார் பத்தியின் மேலீட்டால் இத்தகைய சிவனடித் தொண்டுகள் பல புரிந்து கலிக்கம்ப நாயனர் சிவபதம் அடைந்தார்.

(46) கலிய காயனர்

இதாண்டை நாட்டில் திருவொற்றியூரிலே எண்ணெய் வணிகர் மரபில் தோன்றியவர் கலிய நாயனர் பெருஞ். செல்வராகிய இவர் ஒற்றியூர்த் திருக்கோயிலில் இரவும். பகலும் திருவிளக்கிடும் திருத்தொண்டினை ஆர்வமுடன் செய்துவந்தார். இவரது அன்பின் திறத்தை உலகத்தார். அறியச் செய்தல்வேண்டும் என்னும் இறைவனது அருட் குறிப்பினல் இவரது செல்வம் குறைய வறுமைநிலை யுண்டாயிற்று. வறுமையிலும் கூலிக்குச் செக்காடி அக் கூலிகொண்டும் தம்முடைமைப் பொருள்களை விற்றும் திரு விளக்கெரிக்கும் பணியினைத் த ைடயி ன் றிச் செய்து வந்தார். முடிவில் தம் மனைவியாரை விற்றேனும் இத் தொண்டினைச் செய்தல் வேண்டும் என எண்ணி அவரை விற்க முற்பட்ட நிலையில் வாங்குவார் இல்லாமையால்