பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 4

மனந்தளர்ந்த கலியனர் ஒற்றியூர்க் கோயிலுள் திரியிட்ட அகல்களைப் பரப்பி எண்ணெய்க்கு ஈடாக உதிரத்தையே நிறைக்க எண்ணித் தமது கழுத்தை அரிந்தார். அந்நிலையில் அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றி அருட் காட்சி வழங்க உடம்பின் ஊறு நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்ருர். சிவபெருமான் கலிய நாயஞரைப் பொற் புடைய சிவபுரியிற் பொலிந்திருக்க அருள் புரிந்தார்.

(47) சத்தி நாயஞர்

சோழநாட்டில் வரிஞ்சையூரில் வேளாண்மரபில் தோன்றி யவர் இவர். சிவனடியார்களே யாரேனும் இகழ்ந்துரைப் பாராயின் அக்கொடியோரது நாக்கினே அறுத்தற்கென எப்பொழுது கையிற் சத்தி(கத்தி)யுடன் இருப்பவர் ஆதலால் சத்தியார் என அழைக்கப்பெற்ருர். அடியார்களே அவமதித்துத் தீமொழி கூறுபவர் நாக்கினைக் குறட்டாற் பற்றியிழுத்துக் கையிலுள்ள கத்தியில்ை அரிதலாகிய ஆண்மைத் திருப்பணியினை இவர் அன்பிளுேடு நெடுங்காலம் செய்திருந்து சிவபெருமான் திருவடியை அடைந்தார்.

{48) ஐயடிகள் காடவர்கோன் காயனர்

காஞ்சி நகரத்திற் பல்லவர் குலத்தில் தோன்றித் தொண்டை நாட்டினை ஆண்ட இவ்வரசர் பெருமான் வடமொழி தென்மொழிகளில் வல்லவர். இவ்வுலகியல் வாழ்வு நிலையற்றதெனத் தெளிந்து தமது அரச பதவியைத் துறந்து தில்லைச்சிற்றம்பலம் முதலிய திருத்தலங்களைப் பணிந்து ஒவ்வொரு வெண்பாவினுற் பாடிப் போற்றிச் சிவ பெருமான் திருவடியை அடைந்தார். இவர் பாடிய வெண்பாப்பனுவல் கேத்திரத் தி ரு .ெ வ ண் பா எனப் பதினுேராந்திருமுறையிற் சேர்க்கப்பெற்றுள்ளது.

(49) கணம்புல்ல காயஞர்

வடவெள்ளாற்றுத் தென்கரையிலுள்ள இருக்கு வேளூர் என்னும் ஊரிலே தோன்றியவர். எப்பொருளும்,