பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

நாயனர் ஈசனடியார்க்கான திருப்பணிகள் புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியா துறையும் பெருவாழ்வு பெற்ருர்.

{5ఖీ} கழற்சிங்க ក្តៅខ្សរ៏

இவர் பல்லவர் குலத்தே தோன்றித் தொண்டை. நாட்டினை ஆட்சி புரிந்த பேரரசர். வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாளும் வேந்தராகிய இவர், தம் தேவியுடன் திருவாரூர்ப் பெருமானை வழிபடச் சென்ருர், கோயிலை வலம் வந்து திருப்பூமண்டபத்தை யடைந்த பட்டத்தரசி கீழே கிடந்த நறுமலரொன்றை எடுத்து முகர்ந்தாள். அந்நிலையில் அங்கு வந்த செருத் துணையார் என்னும் சிவனடியார் இவள் இறை: வனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள்’ என்று வெகுண்டு அரசியின் மூக்கினைக் கத்தியால் அரிந்தார். அரசியின் அரற்றுதலைக் கேட்டு அங்கு வந்த கழற்சிங்கர் நடந்த நிகழ்ச்சியினை யறிந்து பூவை எடுத்த கையை யன்ருே. முதலில் தடிதல் வேண்டும்’ என்று கூறித் தம் உடைவாளே உருவி அரசியின் கையைத் தடிந்தார். சிவபெருமான் பால் வைத்த பேரன்பின் திறத்தால் இத்தகைய அரிய திருத்தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனர் சைவ நெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பேரின்ப வாழ்வு பெற்ருர்.

(55) இடங்கழி நாயனுர்

சோழர் குடியில் தோன்றிய இவர் , கோளுட்டின் தலைநகராகிய கொடும்பாளுரில் தங்கியிருந்து இருக்கு வேளிர்குலத்து அரசினை ஏற்று அந்நாட்டின் தலைவராய் ஆட்சி புரிந்தார். சைவ நெறி வைதிகத்தின் தரும நெறி யோடு தழைப்பத் திருக்கோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்ச்சனை நிகழச் செய்துவந்தார் . . சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுப்பதன இயல் பாகக்கொண்டிருந்தார். அந்நாளில் சிவனடியார்க் குத்