பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

புகழ்த்துணையார். இவர் சிவாகம விதிப்படி அரிசிற்கரைப் புத்துர்த் திருக்கோயிலில் இறைவனைப் பூசனை செய். திருந்தார். அக்காலத்திற் பஞ்சம் உண்டாயிற்று. தமக்கு உணவின்றி வாட்டமுற்ற நிலையிலும் எம் இறைவனே வழிபடாது விடுவேனல்லேன் என்னுந்துணிவுடையராய், அல்லும்பகலும் வழிபாடு செய்தார். ஒருநாள் சிவ லிங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டும்போது பசிநோயினுற் கைசோர்ந்து திருமஞ்சனக்குடம் இறைவன் திருமுடிமேல் விழத் திருவடியில் உயிர்ப்பற்று வீழ்ந்தார். அப்பொழுது இறையருளால் உறக்கம் வர, இறைவன் கனவிலே தோன்றிப் பஞ்சம் நீங்கும் வரையிலும் நாம் நாள்தோறும் இங்கு ஒருகாக வைப்போம் என்று? அருள்செய்தார். துயிலுணர்ந்தெழுந்த புகழ்த்துணையார் இறைவர் திருப்பீடத்தின்கீழ் ஒரு காசு இருக்கக் கண்டு அதனேக் கைக்கொண்டு உணவு பெற்று அமுதுசெய்து தமது வழிபாட்டினைக் குறைவறச் செய்து வந்தார். அந்நாள் முதல் பஞ்சம் நீங்கும் வரையிலும் காசு பெற்று இறை வனைப் பூசித்துப் பஞ்சம் நீங்கிய பின்னரும் நெடுநாள் சிவபூசனை புரிந்து புனிதர் அடி நீழல் சேர்ந்தார்.

(58) கோட்புலி நாயனர்

சோழநாட்டில் நாட்டியத்தான் குடியில் வேளாண் மரபில் தோன்றியவர் கோட்புலி நாயனர் . சோழ மன்னர்க்குச் ச்ேனபதியாக விளங்கிய இவர் , மன்னன் பால் ஊதியமாகத் தாம் பெற்ற பொருளைக்கொண்டு சிவாலயங் களுக்குத் திருவமுதுக்கென நெல்லை வாங்கி நெற்கூடுகளிற் சேமித்துவைக்குந் திருப்பணியைப் பல்லாண்டுகளாகச் செய்துவந்தார். அரசனது ஏவலால் கோட்புலியார் போர்முனைக்குச் செல்ல நேர்ந்தது. அப்பொழுது கோட். புலியார் தம் சுற்றத்தாரை நோக்கி ‘இறைவனுக்கு அமுது' படிக்காக வைத்துள்ள இந்நெல்லினை நீங்கள் எடுத்தல் கூடாது, திருவிரையாக்கலி ஆணை’ எனத் தனித்தனியே! சொல்லிவிட்டுப் போர்முனைக்குச் சென்ருர் சில: