பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தாளிலே கடும்பஞ்சம் வந்தது. அந்நிலையில் பசியால் வருந்திய சுற்றத்தார் நாம் உண்வின்றி இறப்பதைவிட இறைவர்க்கு வைத்த நெல்லைக் கொண்டா கிலும் பிழைத்து உயிர் தாங்கியிருந்து பின்னர் எடுத்த குற்றந் திரக் கொடுத்துவிடுவோம்’ என்று எண்ணி நெற் கூட்டைத் திறந்து செலவழித்துவிட்டார்கள். போர் முனேயிற் சென்று பகைவரை வென்று வந்த கோட்புலி யார் இறைவன் திறத்துச் சுற்றத்தார் செய்த குற்றத்தை புணர்ந்து சுற்றத்தாரை வீட்டினுள்ளே அழைத்து எல் னோரையும் வாளாற்கொன்று வீழ்த்தினர். அங்குள்ள இளங்குழந்தையைக் கொல்லப் புகுந்தபோது வாயில் காவலன் தடுத்தான். இக்குழந்தை நெல்லுண்டவளது பாலையுண்டது என்று அதனை மேலே எடுத்தெறிந்து வாளால் இருதுணிபட வீழ்த்தினர். அந்நிலையிற் சிவ பெருமான் கோட்புலியார்க்கு வெளிப்பட்டுத் தோன்றி. த,அன்பனே, உன்னுடைய கைவாளால் பிறவிப்பாசம் அறுத்த தின் சுற்றத்தார் பொன்னுலகின் மேலுலகம் புக்கணேந்தனர். புகழுடைய நீ இந்திலேயே நம்முடன் அணேவாயாக’ என அருள் புரிந்து மறைந்தருளினர்.

கோட்புலி நாயனர் சுந்தரமூர்த்தி நாயஞ்ரைத்,தம் இல்லத்தில் வரவேற்று உபசரித்துத் தாம் பெற்ற வனப் பகை, சிங்கடி என்னும் பெண்கள் இருவரையும் பணிப் பெண்களாக ஏற்றருளும்படி வேண்டினர். சுந்தரர் அவ் விருபெண்களையும் தம்முடைய அன்புக்குரிய மக்களாக ஏற்று அவர்களுக்குத் தந்தை எனத் தாம் பாடிய திருப் பதிகத் திருக்கடைக் காப்புப் பாடல்களில் தம்மைக் குறிப்

பிட்டு மகிழ்கின் ருர்:

(58) பத்தாய்ப்பணிவார்

சிவனடியாரைக் கண்டார் சாதி முதலியன விசாரி யாமல் அவர்களைச் சிவனெனவே வழிபடுபவர்கள், சிவபூசைதனைக் கண்டு மகிழ்பவர்கள், சிவனை அருச்சிப்