பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மனத்திஞலேயே பொருள் தேடித் தம் மனத்தின்கண்ணே நீண்ட நாளாகச் சிந்தனே செய்து சிவபெருமானுக்கு ஒரு திருக்கோயில் அமைத்தார். அக்கோயிலில் இறைவனை எழுந்தருளச்செய்ய நல்லதொரு நாளும் குறித்தார். அக் காலத்திற் காடவர் கோமாளுகிய பல்லவமன்னன் காஞ்சி நகரத்திற் கற்றளி (கயிலாய நாதர் திருக்கோயிலை) அமைத்து இறைவனே எழுந்தருளச் செய்தற்கு ஒரு நாளே நிச்சயித்தான். பூசலார் குறித்த நாளும் பல்ல வன் குறித்த நாளும் ஒன்முக அமைந்தது. பூசலாரது பேரன்பின் திறத்தை வெளிப்படுத்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் பல்லவ மன்னன் கனவில் தோன்றித் தான் அந்நாளிற் பூசலார் கோயிலில் எழுந்தருளுவதாகவும் , மன்னன் கட்டிய கோயிலில் மற்ருெரு நாள் எழுந்தருளுவ தாகவும் அருள்செய்து மறைந்தார். மன்னவன் திருநின்ற ஆர்க்குச் சென்று பூசலாரை வணங்கி அவர் கட்டிய மனக் கோயிலின் மாண்பினே அறிந்துகொண்டார். பூசலாரும் தம் மனக்கோயிலுள் இறைவனே எழுந்தருளச் செய்து நாட்பூசனையும் திருவிழாவும் நடத்திச் சிவபெருமான் திருவடி சேர்ந்து இன்புற்ருர்,

(67) மங்கையர்க்கரசியார்

சோழ நாட்டில் வளவர் குடியில் மணிமுடிச்சோழன் மகளாராகத் தோன்றி மானியார் என்னும் இயற் பெயர் பெற்ற இவர், செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் எனத்தகும் பொலிவுடையார்; பாண்டிய மன்னனே மணந்து, பாண்டியர் குலத்துக்கு நேர்ந்த பழியினைத் தீர்த்த தெய்வப்பாவை. திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவருளினலே செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் புறச்சமய இருள் நீக்கித் திருநீற்றினைப் பரவச் செய்தவர். ஆளுடைய பிள்ளையார் மங்கையர்க்கரசி வள வர்கோன் பாவை’ எனத் திருப்பதிகத்திற் சிறப்பித்துப் பாராட்டப்பெற்ற பெருந்தவச் செல்வியார்: பாண்டிமா தேவியாராகிய இவ்வம்மையார் தம் கணவர் புறச்