பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

சமயக்கூனும் உடற்கூனும் நீங்கி நின்றசீர் நெடு மாறஞராகத் திகழச் சைவ வழித்துணையாய் நெடுங் காலம் வாழ்ந்து சிவநெறியினை வளர்த்தும் தம் கணவன ருடன் ஆலவாயரன் சேவடிக்கீழ் அமர்ந்திருக்கும் நற் பேறு பெற்ருர்.

{88) நேச நாடிசூர்

காம்பீலி என்னும் பழம்பதியில் சாலியர் குலத்திலே தோன்றியவர் நேச நாயனர். ஆடை நெய்யுந் தொழி லினராகிய இவர் சிவனடியார் திருவடிகளைச் சென்னி யிற்கொண்டு போற்றும் புகழுடையார். இவர் தம்

மனத்தின் செய்கையைச் சிவபெருமான் திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையைத் திருவைந்தெழுத்துக்கு உரியதாக்கி, கைத்தொழிலின் செய்கையைச் சிவனடி

யார்களுக்கு ஆக்குவாராய் உடையும் கீளும் கோவணமும் நெய்து அடியார்களுக்கு அன்புடன் கொடுத்தலாகிய திருப்பணியினே இடையருது செய்து இறைவன் திருவடி நிழலில் அமர்ந்து இன்புற்ருர்,

(89) கோச்செங்கட்சோழ காவஞர்

சோழநாட்டிற் சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள சோலையில் வெண்ணுவல் மரத்தடியில் வெளிப் பட்ட சிவலிங்கத்தைப் பெருந்தவத்தையுடைய வெள்ளே யானே திருமஞ்சனஞ் செய்து மலர் தூவி வழிபாடு செய்தது, அதஞல் அவ்விடத்திற்குத் திருவானேக்கா என்ற பெய ருண்டாயிற்று. அங்கே மெய்யுணர்விற்சிறந்த சிலந்தி யொன்று இறைவன் திருமுடிமேல் சருகு முதலியன உதி ராதபடி தனது வாயின் நூலாற் பந்தரிழைத்து வழி பட்டது. வாய்நீர் நூலால் அமைந்த அப்பந்தர் துய்மையில்லாதது என யானை சிதைத்தது. சிலந்தி மீளவும் பந்தர் செய்தது. யானே மறுநாளும் அதனைச் சிதைத் துப் போக்கியது. அது கண்டு வெகுண்ட சிலந்தி யானே யின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்தது. வருத்தம்