பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பொருத யானே, கையை நிலத்தில் அறைந்து உயிர் துறந்தது. சிலந்தியும் உயிர் துறந்தது. ஆனேக்கா இறைவர் வெள்ளானேக்கு வீடுபேறளித்தார்.

சோழமன்னன் சுபதேவனும் அவன் மனேவி கமல. வதியும் செய்த சிவபுண்ணியத்தின் பயனுகத் தன்னை வழிபட்ட சிலந்தியை அவர்கட்கு மகளுகப் பிறக்கச் செய்தருளினர். ஈன்றதாய் செங்கண்ணளுகிய அக் குழந்தையைக் கண்டு என்கோச்செங்களுனே' என அருமை தோன்ற அழைத்து உடன்ே உயிர் நீங்கிளுள். மன்னன் தன் குழந்தையை வளர்த்து உரிய காலத்தில் நாடாள் வேந்தகை முடிசூட்டித் தவநெறியைச் சார்ந்து சிவ லோகஞ் சார்ந்தான்.

கோச்செங்கட்சோழர் சிவ பெரு மானது திரு வருளினலே முன்னைப் பிறப்பின் உணர்வோடு சிவ நெறி வளரச் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுந் திருப் பணியை மேற்கொண்டார். திருவானைக்காவில் வெண்ணுவல் மரத்தடியில் வீற்றிருந்தருளும் இறைவனுக் குப் பெருந்திருக்கோயில் அமைத்தார். சோழநாட்டின் அகநாடுகள்தோறும் சிவப்ெருமானுக்கு மாடக்கோயில் அமைத்து நாள்வழிபாடும் திருவிழாவும் சிறப்புற நிகழவேண்டும் நிபந்தங்கள் வகுத்து நாட்டினை நல்ல முறையில் ஆட்சிபுரிந்தார். இறைவன் திருநடம் புரியும் தில்லைப்பதியை யடைந்து பொன்னம்பல்வனை வணங்கித். தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைக்ள் கட்டுவித்து மேலும் பல திருப்பணிகளைச் செய்து தில்லையம்பலவாணர் திருவடி நீழலை அடைந்தார்.

சங்க காலச் சோழமன்னராகிய கோச்செங்கட் சோழர் சேரமான் கணக்கா விரும்பொறை வென்று சிறைப்படுத்தியபொழுது பொய்கையார் களவழி நாற்பது என்னும் பனுவலைப் பாடிச் சேரனச் சிறையினின்றும் விடுவித்தார். இவர் பாண்டியர்க்குரிய தென்னட்டை பும் கைக்கொண்டு வேப்பமலர் மாலை சூடி ஆட்சி