பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

学?

புரிந்தார் என்பது, தென்னவன யுலகாண்ட செங்களுற கடியேன்” எ ன் ற திருத்தொண்டத்தொகையாலும் ‘நிம்பநறுந் தொங்கற் கோச்செங்களுன் என வரும் திருத் தொண்டர் திருவந்தாதியாலும் புலகுைம். (70) திருநீலகண்டய்ாழ்ப் பாண நாயஞர்

இவர் நடுநாட்டிலே திருஎருக்கத்தம்புலியூரிலே பாணர் மரபில் தோன்றியவர். மனைவியார் மதங்க சூளாமணியாருடன் மதுரைத் திருவாலவாய்த் திருக்கோயி லின் முன் நின்று இறைவரது பொருள்சேர் புகழ்ப் பாடல்களே யாழிவிட்டு வாசித்தார். ஆலவாயிறைவர் பாணரைத் திருக்கோயிலின் உள்ளே அழைத்துப் பொற் பலகையிடும்படி அடியார்கட்குப் பணித்தருளப் பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களே உலகெலாம் அறிய இன்னிசை யாழில் இட்டு வாசித்துப் போற்றினர். திருவாரூரையடைந்த போது ஆரூர்ப்பெருமான் பாணர் உள்ளே வர வட திசையில் வேருெரு வாயில் வகுத்தருள ஆரூர்த் திருமூலட் டானத்து அமர்ந்த இறைவர் திருமுன் யாழிசைத்துப் போற்றினர். காழிப்பதியை யடைந்த திருநீலகண்டப் பெருமாளுர் திருஞானசம்பந்தப்பிள்ளையாரை வணங்கி ஞர். பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களை யாழி லிட்டு இசைத்துப் பிள்ளையாரைப் பிரியாதுடனிருக்கும் பேற்றினைப் பெற்ருர். திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடையபிள்ளையார் திருமணத்தைக் கண்டு மதங்க சூளாமணியாருடன் ஈறில் பெருஞ்சோதியினுள்ளே புகுந்து பேரின்ப வாழ்வு பெற்ருர்.

71) சடைய நாயஞர்

திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையஞர். இவர் இசை ஞானியாரை மணந்து உலக மெலாம் மெய்ஞ்ஞானவொளியினைப் பரப்பும் நம்பி யாரூரரை மகவாகப் பெற்று யாவரும் போற்றும்

பெருமையை அடைந்தார்.