பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறு

செந்தமிழ்ப் பாண்டிநாட்டிலே திருவாதவூரிலே ஆமாத்திய அந்தணர் குலத்திலே இறைவனருளால் தோன்றியவர் திருவாதவூரர். இளமையிலே எல்லாக் கலைகளையும் பயின்ற வாதவூரரைப் பாண்டியன் தன் அமைச்சராக அமர்த்தித் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்பளித்துப் பாராட்டினன். வாதவூரர் பாண்டி யனுக்கு அமைச்சராய் அறநெறி வழுவாமல் தம் கடமையைச் செய்து வந்தார். ஆயினும் உலகியற் பற்றின்றி மெய்ப்பொருளுணர்த்தவல்ல அருட்குருவை நாடியிருந் தாா.

சோழநாட்டுக் கடற்கரையில் வெளிநாட்டிலிருந்து குதிரைகள் வந்திறங்கிய செய்தியை அறிந்த பாண்டியன் வாதவூரரை அழைத்து நல்ல குதிரைகளே வாங்கி வரும்படி பெரும்பொருள் கொடுத்துப் பரிசனங்களுடன் அனுப்பினன். அங்கயற்கண்ணியுடன் அமர்ந்த ருளும் ஆலவாயிறைவரை வணங்கி மதுரையிலிருந்து புறப்பட்ட வாதவூரர் தென்வெள்ளாற்றின் கரையிலுள்ள திருப் பெருந்துறையை அடைந்தார். அந்நிலையிற் சிவபெரு மான் வாதவூரரை ஆட்கொள்ளவேண்டி அந்தணராய்க் குருவடிவந் தாங்கிக் குருந்த மரத்தடியில் எழுந்தருளி மாளுக்கர் பலர்க்கும் சிவஞானப் பொருளே உணர்த்திக் கொண்டிருந்தார். அவ்வழகிய திருக்கோ லத்தைக் கண்ட வாதவூரர் குருமூர்த்தியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தம்மை ஆண்டு கொண்டருளும்படி வேண்டி நின்ருர். குருவாய் எழுந்தருளிய இறைவன் வாத ஆரர்க்கு ஞானதீட்சை செய்து திருவைந்தெழுத்தை உபதேசித்தருளினர். குருவருள் பெற்ற வாதவூரர் தம்