பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தியுரை ஞானத்து ஞானம் அத்து எனப் பிரியம்; அத்து: சாரியை சாரியையின் அகரம், -

"அத்தி னகரம் அகரமுனை இல்லை" என்ற தொல்காப்பியர் நூற்பாப்படி கெட்டது. தெளிஞர். இதில் ஞகரம் பெயர் இடைநிலை, எல்லாம் என்பது முழுமை உணர்த்த வந்த உரிச்சொல். பொல்லாத என்பது பொல்லா என ஈறு கெட்டு நின்றது. கேளிர் முன்னிலைப் பன்மை ஏவல்; ஈர் - விகுதி, சொல் கல் - "சொல்லளவில் ஒத்து ஒளி உயர்வளவில் ஒவ்வாதிருக்கும் பல்லாயிரம் வகைப்பட்டு நிற்கும் கற்கள் எல்லாம்” எனப் பொருள் வந்து நின்றது.

"வெற்றிரும்பும் பொன்னும் தமனியப்போர் மேவியபோல்" என்ற சான்றோர் வாக்கும் கவனிக்கற்பாற்று.

"மாணிக்கம்' என்றது ஈண்டு நவமணிகளிற் சிறந்து விளங்கும் செம்மணியை பொல்லாக் கருப்புகழ் பிறப்பு இறப்புக்குக் காரணமாகிய காம மாதிகளை உண்டாக்கி வைத்தலின் பொல்லா என்றும், கொலையாகிய கொடுமைகளைச் செய்து பெற்ற புகழ் ஆதலின் கருப்புகழ்' என்றுங் கூறிய நயம் கருதற்பாலது. மாநிலத்துப் பிறந்திருந்த மக்கள் குறித்து நிற்கும் புகழ் எல்லாம் கேட்பாரை அவாவுக்கு உள்ளாக்கிப் பிறப்புத் தருந் தன்மையவாயும், எமது முருகப்பிரர்ன் திருப்புகழ் அவாவைப் போக்கிப் பிறப்பறுத்து முத்திப் பதந் தருந் தன்மையவாயும் இருத்தல் பற்றி முறையே பொல்லாக் கருப்புகழ் திருப்புகழ், ள்ன்ற சிறப்பு உற்று நோக்கத் தக்கது.

வீரன். ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகம் ஆண்ட சூரனைக் கொன்றதனால் என்பர். இன்னும் முருகன்