பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



வள்ளியம்மையாரைக் குறிக்கும்போது உவமை ஆகுபெயர். ஆலையும் - சர்க்கரை ஆலைகளும் என்பது பொருளாம். திரு - இலட்சுமி தேவியும், ஆ - காமதேனுவும், இநன் - சூரியனும் பூசித்து அமர்ந்த, குடி ஊர். இந்தத் திருவாவிநன்குடி என்ற தலத்தில் திருமகளும் காமதேனுவும் சூரியனும் வந்து முருகனைப் பூசித்துப் பேறு பெற்றனர். ஆதலால் திருவாவிநன்குடி என ஊர்ப் பெயர் ஆயிற்று என்பது பழநி தலப் புராணம்,

"அரியும் பிரமனும் தொழ ஆலால முண்ட சிவபெருமான்

புத்திரனே அசுரரைத் தேவர் துயர் தீர அழித்த பெருமையையும்

வேலாயுத்தையும் உடைய பெருமானே உலகில் உடலைச் சுமந்து

மாதர் மயிலில் மெலிந்தழிதல் நின் பாதத்தைத் துதிக்கும் எனக்குத்

தகுதி உடையதாகுமோ? நீ அருள் செய்யாயோ என்பது குறிப்பு.

xx本 -