பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



தருபட|கழி

பெருகாதல் உற்ற தமியேனை நித்தம்

பிரியாத பட்சம் உடனேயென் பிழையே பொறுத்துன் இருதாளில் உற்ற

பெருவாழ்வு பற்ற அருள்வாயே! குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த

குகனே குறத்தி மணவாளா! குளிர்கான் மிகுத்த வளர்பூக மெத்து

குடகா விரிக்கு வடபால்வாழ்

திருமால் தனக்கு மருகா! உமைக்கொர் . -

சிறுவா கரிக்கும் இளையோனே!

திருவே ரகத்தில் உறைவா அரக்கர்

சிரமே துணித்த பெருமாளே!

தேசிகத் திருவடிவாய், சிவபெருமானுக்கும், திருப்பிரணவ மந்திரோபதேசஞ் செய்தருளிய திருக்குமரனே! வள்ளி தேவியாரை மணந்தருள் செய்த திருக்கல்யாண கோலத்தை உடையவனே மேற்கே இருந்து வரும்படியான திருக்காவிரி ஆற்றிற்கு வடக்குத் திக்கில் வாழ்கின்ற, மகாவிஷ்ணுவுக்கு மருமகனே! உமாதேவியாருக்கு ஒரு புத்திரனே யானைமுகக் கடவுளாகிய விநாயகருக்குத் தம்பியே திருவேரகம் என்னும் திருப்பதியில் எழுந்தருளி இருப்பவனே அசுரர்களின் சிரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்திய பெருமானே வாசனையையே மிகவுங் கொண்டுள்ள கூந்தலையுடைய பெண்கள், ஆசை மயக்கத்தினால், மன்மதன் நூலாகிய கலவி நூலின் தந்திரங்களினாலே காமத்தை மூட்டி எச்சில் முத்தத்தை ஊட்ட வெற்பை ஒத்த கொங்கைகளுக்குள் கலந்து கூடி, மிக்க காதலைக் கொண்டுள்ள பற்றுக்கோடு அற்றவனாகிய அடியேனை,