பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

த. கோவேந்தன், டி லிட் • 107

தினந்தினம், அகலாத அவாவோடு என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருளி, இரண்டு திருவடிகளிலும் பொருந்திய, பெரிய முத்தி இன்ப வாழ்வை அடியேன் கைக்கொள்ள, அருளைச் செய்வாயாக.

மருவே ஏகாரம் இசை ஏகரமும் ஆம், மதனாகமம் இன்பநூல்: காம நூல் என்பாரும் உண்டு. விரகு தந்திரம். முலைக்கு ளுறவாகி முலைக்கு உள் உறவு ஆகி எனப் பிரித்துத் தனங்களிடத்து உள்ளம் மிகவும் ஆசை கொண்டவனாகி எனப் பொருளுரைத்தலும் ஆம் தமி தனிமைப் பொருளுணர்த்தும் ஆதரவு அற்றவன். உதவி செய்யத் துணை இன்றிருப்பவன் என்பது பொருளாம். குருவாய் அரற்கும் என்றதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு உம்மை. திருமால் மருகா என்றது திருமாலுக்குத் தங்கை மகன் முருகக் கடவுளாதலினால் திருமாலின் புத்திரிகளாகிய சந்திரி, அமுத வல்லிகளாகிய இருவருமே தவத்தால் வள்ளி, தேவானைகளாக வந்து முருகக் கடவுளை மணந்ததனாலும், மருகன் என்றார். உமைக்கு மாயவன் சகோதரி" என்னும் உண்மையும் அறிக.

20.தான்ன தத்தன தத்தன தத்தன தான்ன தத்தன தத்தன தத்தன தான்ன தத்தன தத்தன தத்தன - தனதான். கோமள வெற்பினை ஒத்த தனத்தியர்

காமலை ஒப்பவர் சித்தம் உருக்கிகள் கோவை இதழ்க்கனி நித்தமும் விற்பவர்

மயில்காடை