பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

9



ஞான வீரனும் ஆம் வேதனைக் குட்டிச் சிறையிட்டதோடு போதமூர்த்தியாகிய இறைவர்க்கும் குருவாய் நின்றமை பற்றி ஞான வீரன் என்பர்.

கடல் சுவறவும். மலை பிளக்கவும் வல்ல சத்திவேலைத் தாங்கி அசுரரை ஒழித்த அமரரைக் காத்தருளியவர் ஆதலின் 'வீரன் என்றார்.

ஞானம் என்றது ஈண்டுப் பதி.ஞானத்தை, கேட்குஞ் செவி என்றதனால் செப்பும் நாவு கருதும் உள்ளம் என்பனவுங் கொள்ளக் கிடக்கின்றது. -

"ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குறித்தே" என்பது

கட்டளை. -

இச் செய்யுளில் திருப்புகழைக் கேட்குஞ் செவி ஏனைப் பொல்லாக் கருப்புகழைக் கேட்கா என்றமையால், ஞான மிலார்க்கும் எமது முருகன் பெருமையைக் கூறும் திருப்புகழ் ஞானத்தை உண்டாக்கி, புத்தி - பத்தி - சித்தி - முத்திகளை எய்துவிக்கும் என்பதும், சாரமற்ற மற்றவற்றிலும், சாவும் பிறப்பும் சாரச் செய்யும் தீய நூலிலும் சிந்தை செல்லாது என்பதும் பெறப்படும். இது அருணகிரியார் காலத்திற்குப் பிற்பட்ட ஒரு பெரியார் கூற்று.

திருப்புகழ் டிக்கும்.அவர் சித்தை உதுவ/)ே ஒருத்தரை மதி2திகை உன்தன் அருண)ே பெரும்ரை மிகப்பொழுது வென்றும் மீதே தாத்தருரு திருத்தணிகை தின்ர2ெ.மு மரனே

வள்ளியம்மையாரைத் தன்னோடு கொண்டு போம்பொருட்டு ഥങജു.ജ வாழும் வேடருடன் போர் செய்து, அவர்களை வெற்றி கொண்டு, மயிலாகிய ஊர்தியின்