பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



கோமளம் இளமை என்னும் பொருளது. இது வடமொழி என்பர். காமனை ஒப்பவர் கண்டார் மனத்தை வயப்படுத்தும் எழில் வாய்ந்த மன்மதன் காமன்னை ஒப்பவர் என்பது தொகுத்தல் விகாரம் பெற்று காமனை என்றாயது. இதற்குப் பொருள் கற்பகச் சோலைக்கு இறைவனாகிய இந்திரனை ஒத்த புணர்ச்சியை விரும்புவோர்களை என்றும் பொருள் கூறுவர். கோவை இதழ்கனி - கொவ்வைக் கனிபோலும் இதழ். கோவை இதழ்க்கனி நித்தமும் விற்பவர் - ஏனையர் வணிகத்தில் விற்கும் பண்டம் விற்றுப்பொருள் வாங்கிய பின் வணிகரை விட்டுப்போம். இவ் வேசையர் வணிகத்திலோ இவர் விற்பனை அவர் தரும் பொருளை வாங்கிய பின்னும் இவரிடமே இருக்கும். வாங்கியவர்கள் பெற்றிடும் பயனினும் இவர் அதிகம் பயன் பெறுவர். அவர் கைப்பொருளும் இவர் கைப்பொருளதாகும். இவர் விற்றன இவரிடம் விட்டகலா, ஆதலின், நித்தமும் விற்பவர் என்றார். இதனை,

தக்கவை ஒத்து பின்னர் தருபொருள் கொன்றாம் கொன்கை அங்தன் வணிக கன்ரே அடைதம தங்ர தாகச் செங் நகங்கள் சேர்த்தேணி 2ெத்ததிர் சரக்கப்பெர்ரே ஆரம்பொருள் வாக்குருச் சண்கை அண2ண? கந்தரன்

தன்ரே” என்றதனால் அறியலாம். இன்னும்,

என்னையே புனரு ாேகன் எனக்குரே இன் தன்கி 2ொன்னபுக் கொடுத்த பதப் /ேதிணிப்

வழ்வதேனே.”

என்ற அடிகளாலும் அறியலாம். . X

நிறத்தாலும் வடிவத்தாலும் கொவ்வைக்கனி இதழுக்கு உவமம் ஆயிற்று. நற்புறவத்திடு என்பதனை, நட்புறுவத்திடு