பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

த. கோவேந்தன், டி லிட் ఉ• 113

பாண்டியனது மிகுந்த முதுகு வளைவையும் ஏற்படும் நீங்கா தமைந்த காய்ச்சல் பிணியையும் நீங்கவும், சமய வாதம் பேசிய, சமணர்களாகிய ஊமைகள். நற்குணம் இல்லாத மயில் இறகோடு, கொடிய கழுவிலே ஏறவும், செழுமையான தமிழ்ப் பதிகங்களை, திருவாய் மலர்ந்து பாடி அருளிய புலவனே! அழகிய திருநீற்றைத் தந்தருள்வோனே யானைகள் வசிக்கும் சாலைகளையுடைய பசுமையான தினைப்புனக் கொல்லைகளில், திரிகின்ற வேடர் கூட்டங்கள், ஒன்று சேர்ந்து வெறி ஆட்டம் ஆடி கும்பிடப் பெற்றவனே கும்பிட்ட அவர்களுக்கு அவர் விரும்பும் உலக வாழ்வைத் தந்து அவர்களுடனே பெருமை மிக்குச் சிறந்த மலைகளில் எல்லாம் திருவிளையாட்டைச் செய்யும், முருகப் பெருமானே வஞ்ச குணத்தையும் ஈயாமைத் தன்மையையும் கொண்டுள்ள மூடர்களின், பொருளுக்காக. ஊர்களைத் தேடி, மஞ்சரி கோவை துது என்னும் சிற்றிலக்கியங்களை பலவகைப்பட்ட பாக்களினால் வள்ளன்மையால் மிக்க புகழைக் கொண்ட பாரியே என்றும், காரியே என்றும், புகழ்களை வாதித்துச் சொல்லி, புகழ்த்துதி பாடுபவர்களைப் போல, வீணாக, அழிந்து கெடாது. சிவந்த திருப்பாதங்களையும், இன்னோசையை உடைய கிண்கிணியையும், நீலோற்பல மலரால் ஆகிய மாலையையும் உறுதியோடு கூடிய வலிய வேலாயுதத்தையும், மயிலையும். ஆறு திருமுகங்களையும், செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினந்தினமும், பாடி வாழ்த்திட ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக் கனியை ஒத்த அழகிய வாயால், ஒரு திருமொழியை அருளிச் செய்வாயாக.

மஞ்சரி - பூங்கொத்து அது போல்வதோர் மாலைக்கு உவமை ஆகுபெயராயிற்று. கோவை துறைகள் ஒருங்கு அமைத்துப் பாடப்படும் நூல். இது அகப்பொருட்கோவை,