பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆

3.

த. கோவேந்தன், டி. லிட் #17

கொத்துக் கொத்தாக விரிந்த, கடப்ப மலரினாலாய மென்மையான மாலையும். திமிர்ந்து நெருங்கும் புனுகும். பொதிய மலையில் விளைந்த சந்தனமும், குங்குமமும், நறுமணப் பொருள்கள் பலவற்றோடும் கூட்டி அமைக்கப்பெற்ற கலவைச் சாந்தும், செறிந்து, எப்பொழுதும் நன்மை கொண்டுள்ள. பன்னிரண்டு திருத்தோள்களையும் என்றும் அழியாது நிலைபேறுடைய ஆறு திருமுகங்களையும் தந்திர மந்திரங்களையும் பழநி மலையிலும், திருப்பரங்கிரியையும், திருச்செந்துரையும் துதிக்கும் உண்மை அடியார்களின் கருத்துக்களில் அவர்களுக்கு அருள் செய்தற்குக் காட்சி. கொடுத்து, வயலூரில் எழுந்தருளி இருப்பவனே கூட்டமாகிய படத்தையுடைய அரவங்களையும், கங்கை ஆற்றையும், நிலவினையும், குரவ மலரும் அறுகம் புல்லும் சிறிய தும்பைப்பூவும் கொன்றை மலரும். மணம் வீசப் பெற்ற சடாபாரத்தையுடைய சிவபெருமானும், தொழப்பெறும் சிறப்பைக் கொண்டுள்ள குருநாதனே மேன்மையுடைய குடகு நாட்டில் நிலைபெற்ற குடகு, மலை பெற்ற, சிவபெருமானுக்குப் பிரியமுடையவருமான அகத்திய முனிவர், கெண்டிகையாகிய கரகத்தில் முன்னர்க் கொண்டுவந்துவிட்ட விரைவுடைய காவிரி நதி, வந்து பாயும் தென் கடம்பந்துறை என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! கடலும், மன்மதன் பாணமாகிய நீலோற்பலமும், வண்டும், கருத்த கய்ல் மச்சத்தோடு சேல் மச்சமும் இயமனும், தாமரை மலரும், கிரெளஞ்ச மலையைப் பிளந்த வேற்படையும், ஒப்பானது என்று சொல்லும்படி அவைகளோடு போர் செய்து, அங்கும் இங்கும் பிறழ்ந்து மத்தியிலும் இருகடைப் புறங்களிலும் சிவப்பு நிறங்கொண்டு வஞ்சகத்தன்மை நிறைந்து, இன்பக் குறி பலவற்றைப் புவியில் உள்ள காளையரிடம் காட்டி அழகிய பொன்னாற் செய்யப்பெற்ற அசைந்து கொண்டிருக்கும்