பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

121



மகிழு நாயக தேவர்க ணாயக

கவுரி நாயக னார்.குரு நாயக! வடிவ தாமலை யாவையு மேவிய தம்பிரானே!

சிறைக்களத்தை விட்டு நீங்காத அசுரர்களுடைய சயினிங்கள். அழியும்படி நீல வண்ணத்தை உடைய மயிலின்மேல் ஏறியருளிய, வல்லமையும் அதிசயிக்கத் தக்க அலங்காரமும் பொருந்தி யுள்ளவரே கருணையை உடையவரே! கடலினது, அலைகளைப் போன்று. அலைகள் மோதுகின்ற குளிர்ச்சி வாய்ந்த குடகு மலையிலிருந்து வரும் காவேரியாற்றின். பெரிய அலைகள் பொருந்தப்பெற்ற திரிசிர மலையின் மேலே வீற்றிருக்கின்ற வீரனே! மலைப் பக்கங்களில் வசிக்கின்ற வேடர்கள் தலைவனே முதன்மையாக நிற்கும் விநாயகக் கடவுளுக்கு தம்பியாக வந்த தலைவனே காவேரிக்குத் தலைவனே! இனிய அழகிய வடிவத்தையுடைய நாயகனே! தெய்வயானை அம்மைக்குத் தலைவனே! எங்களுடைய தேவியாகிய வள்ளியம்மையா ரிடத்தில் களிப்புக் கொண்ட்ருளும் தலைவனே தேவர்களுக்குத் தலைவனே! உமாதேவியாரின் கணவராகிய சிவபெருமானுக்கு, குருமூர்த்தியாய் நின்ற தலைவனே அழகு அமைந்த மலைகள் எல்லாவற்றிலும் பொருந்தியிருக்கின்ற, தலைவனே பூமியில் வாழ்கின்ற ஆடவர். கொண்ட காதலினால் மடலேறுதற் பொருட்டு உருவத்தை எழுதுகின்ற, காம மயக்கத்தைத் தருகின்ற பெண்களாகிய, வஞ்சகமுள்ள காம விளையாட்டினர். சிறந்த மலரணிந்த குழலாலும், இரு முலைகளினாலும் சோர்வு கொள்ளும் மின்னர்கொடியை ஒத்த இடுப்பினாலும், ஆடையினாலும், நடையின் அழகினாலும், சொற்களினாலும் கண்களினாலும் மயங்குகின்ற இளைத்த நாய் போலும் அடியனேன். மிகவும் வாட்டமடைந்து மயக்கங் கொள்ளுதல் தகுமானதா? ஓரிடத்தும் பற்றுவையாது பறவை போல எங்குந்