பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

φ'

த கோவேந்தன், டி லிட் 127

உரைத்தேன் வாலசந்திரன் இதற்கு உயர்வு பொருந்திய பால சந்திரன் என்பது பொருளாம். நீண் மருங்குல் - அழகு மிகுந்த இடை கொண்டல் - மேகம் நீரைக் கொண்டு இருப்பது என்பது பொருள் கொண்டல் என்றமையால், நீர் கொண்ட கருமேகத்தைக் குறித்தது. அருக்காம மாதர்கள் அழகாற் கிடைத்தற்கு அரிய பெண்கள்.

எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை - 'மணமிக வில்லாத எருக்கு மலர் தாளி, தும்பை. இருக்கால் நினைப்பவர் நெஞ்சிலும், துதிப்பார் நாவிலும் இருப்பவனே என்பது நிரல் நிறைப்பொருள் கோள். யானை என்றது தேவயானையம்மையை, மணி மார்ப - அழகிய மார்பை உடையவனே குறத்தேன் மாது பங்க குறக் குலத்திற் தோன்றிய தேன்போலும் இனிய வள்ளி நாயகியாரைப் பக்கத்தே வைத்திருப்போனே! என்பதாம். தேன், ஈக்கள் கட்டிய தேன்கூட்டிலிருந்து எடுக்கப் பெறினும், உயர்ந்த பூக்களினின்றும் பிறந்தது. மிக இனிமை உடையது. பித்தத்தைத் தணித்துச் சித்தத்தைத் தெளிவிப்பது. அதுபோல, வள்ளி அம்மையார் குறவர் குலத்தில் வளர்ந்தாலும் அம்மான் மகள், அழகிய மானின் மகள் மாமனாகிய திருமால் மகள் என்பதும், உயிர்களுக்குப் பிறவி நோயைத் தரும் மாயா மயக்கப் பித்தகற்றி ஞானத் தெளிவு தருபவன் என்பதும், கந்தக் கடவுளுக்குக் காதற் பித்தகற்றி இன்பத் தெளிவடையச் செய்தவள் என்பன முதலிய கருத்து அமைந்து கிடத்தல் காண்க. -

புன் மலரையும் நன் மலரையும் அணிந்தருள் முதல்வர் புத்திரனே நினைப்பார் துதிப்பார் நெஞ்சிலும் நாவிலும் இருக்கும் வள்ளி தேவானை நாயகனே அகந்தை கொண்ட சூரரை அழித்த வேலாயுதக் கடவுளே! பெண்கள் மயக்கால் அழியும் பாவியாகிய