பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



போதன் மாதவன் மாதுமை

பாதி யாதியு மேதொழு போரி மாநகர் மேவிய பெருமாளே! கொண்டல்கள் உலாவுகின்ற பெரிய மலைகளின் மேலே வாழ்கின்ற வேடர்களது. நீண்ட தினைப்புனத்திலே காவல் செய்யும் வள்ளி நாயகியாரோடு ஆசை கொண்டு. தழுவிக் 'காள்பவனே! ஆன்மாக்கள் உண்மை ஞானத்தை உணருமாறு, வேத புராண நூற்களை. பலவற்றைத் திருவாய் மலர்ந்தருளிய எல்லாப் பொருளுக்கும் காரண வத்துவாய் இருப்பவனே கருணையே வடிவாக அமைந்தவனே! முருகக் கடவுளே! சண்டைமேற் சென்ற, சூரபதுமனை, கடலிலே சேறு உண்டாகும்படி வேலை விடுகின்ற, தலைவனே வீரத்தனஞ் செய்யும் சிறந்த மஞ்ஞையின் மேலே எழுந்தருளி இருப்பவனே! பிரமனும், திருமாலும் அழகிய பார்வதி தேவியார், பாதிப்பாகத்தில் கொண்ட ஆதி முதற் பொருளாகிய சிவபெருமானும், வணங்குகின்ற, திருப்போரூர் என்னும் திருத்தலத்தில், திருக்கோயில் கொண்டு வீற்றிருந்தருளி யிருக்கும். பெருமானே சிறப்பு மிகுந்து விளங்கும் அன்னத்தை நிகர்ப்ப சிறந்த நடையையும். சிறந்த மயிலை நிகர சாயலையும் கலைகள் நிறைந்த முழு நிலவினை ஒத்த முகத்தையுடைய மான் போன்ற மருண்ட நோக்குடைய பெண்களின், தேனை ஒத்த, இன்ப மிகுந்த சொற்களையும் மகா மேருமலையை ஒத்த இளைய பெரிய தனங்களையும் சேல் மச்சத்தை நிகர்த்த கூரிய கண்களையும் குமிழம்பூப் போன்ற நாசியையும் மலர் மாலை விளங்குகின்ற நீண்ட கூந்தலையும் உடைய மூங்கிலை ஒத்த தோள்களையுடைய மாதர்களின் சார்பிலே அலைந்து கொண்டிருப்பவனாகிய அடியேனை, தேவரீருடைய கருணைத் திருவருளினால் சாம வேதத்தை ஒதுபவர்களும் தேவர்களும்,