பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

131



மந்திரங்களைச் சொல்லி அன்றலர்ந்த பூக்களை அர்ச்சித்த திருவடித் தாளில், வணங்கும்படி தேவரீரது திருக் கருணையைச் செய்தருள்வீராக.

மானம் - சிறப்பு: மான எனக் கொள்ளின் உவம உருபும் ஆகும். இதனை

துன்ன உந்து தும்/ என்ன மாண எண்தவை எனது” என்ற தொல்காப்பியர் சூத்திரத்தான்ும் அறிக. மயில் சாயலால் பெண்களுக்கு உவமம் ஆதலின், மாமயில் சேயசாயல் என்றார். சாயல் - மென்மை; இதனை "சாயல் மென்மை" என்ற தொல்காப்பியத்தால் அறியலாம். தேனுலாவிய மா மொழி - தேன் போலும் இனிய சிறந்த மொழி. இள முலை - தளராத கொங்கை சேலுலாவிய கூர் விழி - சேல் மச்சத்தைப்போற் பிறழும் கூரான விழி. தாருளாவிய நீள் குழல் - மாலை அசையும் நீண்ட அழகிய கூந்தல், வேயளாவிய மூங்கிலை ஒத்த

ஆறாதவுைர் அண்ண பரவும்

கூறுங் காலை பங்கு பினவே” என்ற தொல்காப்பியத்தால் அளாவிய என்றதை உவமைச் சொல்லாகக் கொண்டாம். நாண்மலர் - புதுப்பூ, கார்மேகம் நீர்கொண்டு கருத்த நிறமுடையது' என்பது பொருள் இது ஆகுபெயர். காவல் மாது தினைப்புனங் காவல் செய்யும் வள்ளியம்மை கருணாகர முருகன் அருளே உருவாய முருகக் கடவுள் வாரி கடல் நீண்ட நீர் நிலை மிகுந்த நீரையுடையது என்ற பொருளாம்: 'வாரி' என்பது பின்னர்ப் பெரு வெள்ளத்திற்கும் ஆயிற்று அசுரரின் இரத்தம் நிணம் புலால் முதலிய சேர்ந்து கலக்குண்டமையால் சேறாமையின், வாரி சேறெழ என்றார். பூபன் தலைவன் மாமரமாக நின்ற அசுரன்