பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த கோவேந்தன், டி லிட் • 33

திருச்செங்கோடு

20.தந்தா தனநத தந்தா தனந்த

தந்தா தனந்த - தனதான்ா.

பந்தா டிஅங்கை நொந்தார் பரிந்து

பைந்தார் புனைந்த குழல்மீதே பண்பார் சுரும்பு பண்பா டுகின்ற

பங்கே கருகங்கொள் முகமீதே

மந்தார மன்றல் சந்தார் மொன்றி

வன்பா தகஞ்செய் தனமீதே மண்டாசை கொண்டு விண்டா விநைந்து

மங்காம லுன்றன் அடிதாராய்,

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு

கன்றா முகுந்தன் மருகோனே! கண்டோர் புகழ்ந்த நன்கார் மடந்தை

கந்தா வரம்பை மணவாளா! செந்தாது அடர்ந்த கொந்தார் கடம்பு

திண்தோள் நிரம்ப அணிவோனே! திண்கோடு அரங்கள் வெண்கோ டுறங்கும்

செங்கோ டமர்ந்த - பெருமாளே!

கந்தக் கடவுளே சிவபெருமானுடைய திருப்புத்திரனே! விளங்குகின்ற கன்றை உடைய பசுக்கூட்டங்களை மேய்த்த திருமாலுக்கு மருமகனே! பார்த்தவர்கள் எல்லாம் புகழும், அழகு நிறைந்த தேவயானை அம்மைக்கு பற்றுக் கோடாக உள்ளவனே! அரம்பை போலும் அழகு கொண்ட வள்ளியம்மையின்