பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



மணவாளனே சிவந்த மரகதப் பொடிகள் மிகப் பொருந்தியுள்ள, கொத்துக் கொத்தாக உள்ள கடப்பமாலையை உறுதியுள்ள புயங்களில் மிகவும் அணிந்து கொள்பவனே வலிய குரங்குகள் கரடிகளோடு உறக்கம் செய்யும்படியான, திருச்செங்கோடு என்னும் திருப்பதியில், வீற்றிருந்தருளும் பெருமானே! பந்தாட்டம் ஆடி அழகிய கை வருந்திய பெண்கள், விரும்பி பசிய பூமாலைகளைத் தரித்துள்ள, கூந்தலின் மேலும், அழகு மிகுந்த வண்டுகள் இராகத்தைப் பாடும்படியான, தாமரையை ஒத்த முகத்தின் மேலும், செவ்வரத்தம் பூவின் நறுமணத்தோடு சந்தனமும் மாலையும், பொருந்தியுள்ள கொடிய பாவங்களைச் செய்யும் தனங்களின் மேலும், மிக்க காதலைப் பூண்டு. உயிரை விட்டு வருந்தி அழியாமல், உன்னுடைய திருமலர்த்தாள்களை, தந்தருள்வாயாக.

அங்கம் - தேகம், பண்பாடுகின்ற செவ்விளரி ராகத்தைப் பாடுகின்ற என்றலுமாம். மன்றல் - வாசனை. வன்பாதகம் செய் கொடிய பாதகமாகிய காமத்தை உண்டாக்குகின்ற என்பது பொருள் காளையர்க்குக் காமத்தை உண்டாக்குதற்கு முலை முக்கிய கருவியாதலின் இவ்வாறு கூறினார். காமமே எல்லாப் பாதகங்களுக்கும் பெற்றதாய் ஆதலின், வன்பாதகம் என்றார். இதனை,

பெண் த கர புகைத்தெழுவி லென்னறிவு செவிவரம் நன்னெற4) துேதான்் தந்தான்ே"

என்றார் தாயுமானவரும். - அணை மீது மலரமளி மீது என்பது பொருள். காமத்தால்

ஆவி துடித்து வருந்தும் ஆதலின், மண்டாசை கொண்ட விண்டாலி நைந்து என்றார். இனி, விந்து தேகத்தை விட்டுக் கழியக் கழிய உயிர்ப்பலம் ஒடுங்கு மாகலின் இவ்வாறு கூறினர்.