பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



திருக்கோலம் உடையவளும் வராகியும், யோகினியும் செல்வம் முதல் ஆறும் உடையவளும், எல்லாவற்றிற்கும் முதலாக உள்ளவளும், பேரொளியாக விளங்குபவளும், சித்துக் குணத்தை உற்றிருப்பவளும், ஆலகால விடத்தை ஊணாகக் கொண்டவளும், அழகு உடையவளும் பிச்சை வாங்கும் பிரம கடாலத்தை உடையவளும், யோக நிலையில் நிற்பவளும், உயர்ந்த கல்யாண குணங்களை உடையவளும், விளையாட்டை உடையவளும், கற்புடையவளும், வேதத்தை அறிந்தவளும் ஆகிய பார்வதி தேவியாருக்கு திருப்புத்திரனே சேனைகளோடு சூரபதுமன் அழியும்படி மேற்சென்று போர் செய்த சூரதீரனே! பழமுதிர் சோலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும். பெருமானே! இலவமலரை ஒத்த இதழ்களைக் கோதி, நியதியையுடைய மன்மதக்கலையை மிக மிக புன்னகை செய்ய விளையாடி மிகவும் வாது செய்து, எதிரில் பொரும், கொடிய பெருத்த கத்துரி அணிந்த திரண்ட வடவத்தே தோன்றியதாகிய இரண்டு கொங்கைகளும், மார்பிடத்தே பொருந்த மன்மதனது கலவி விளையாட்டிற் சென்று மிகுந்த பல விதமான ஆசையைக் கொண்டு பற்பல செய்கை விகற்பங் கொண்டுள்ள மேன்மை பொருந்திய பாடச்செயலை உடைய இளம் பருவப் பெண்களினுடைய போக வலைக்குள் முழுகி, அழுந்துகின்ற கீழான செயலையுடைய அடியேனும், மேன்மையாகக் கருதப்படும் ஞானபோதத்தைப் பெறுவேனோ?

இலவு இதழ் இலவம் பூவை ஒத்த இதழ் இது உவமத் தொகை, கோதுதல் - ஈண்டு பல்லால் மெல்லக் கடித்தல். ஆர ஆர மிகுதிப் பொருளில் இரட்டியது. இளநகை - புன்நகை முறுவல், புன்னகை யாடும்படி விளையாடி என்பார். இள நகையாட ஆடி என்றார். கோரம் - கொடுமை. வட்டில் கோலகால, கோலம் - அழகு, காலம் - தோன்றும் பருவத்திற் தோன்றிய