பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

143


சோதியின்மி குந்தசெம்பொன் மாளிகைவி ளங்குகின்ற சோலைமலை வந்துகந்த பெருமாளே!

வேதங்கள் மிகவும் ஒலிக்கின்ற, ஆயிரக் கணக்காயுள்ள மடங்களும் தவஞ் செய்யும் இடங்களும், வேள்வி செய்கின்ற இடங்களும், மிகுந்து நிறைந்துள்ள வீதிகளில், ஆயிரம் முகங்களோடுங் கூடிய, சிலம்பொலியை ஒத்து ஒலிக்கின்ற கங்கா நதியானது. பொருந்துமாறு வந்து ஒலிக்கின்ற, துறைகளிலே அடைய. மகுட தோரணங்கள் அசைந்து கொண்டிருக்கும் படியான உயர்ந்த கோபுரங்கள். அடர்ந்து இரத்தினங்கள் சுற்றிப் பதித்த பொன்னலாகிய மண்டபங்கள், செங்கதிர் போன்று. பேரொளியால் மேன்மையுற்ற சிவந்த பொன் மயமான மாளிகைகள் விளங்கும், சோலைமலை என்னுந் திருப்பதியிலே வந்து விரும்பி வீற்றிருக்கின்ற பெருமானே யானையினது மத்தகமானது துண்டுபட்டு விழவும், தாமரை அரும்பு மலரவும், பெரிய மலைகள் அசையவும், மன்மதனது பொன் முடியானது சாய்வைப் பெறவும். சக்கரவாளகிரி, வானமண்டல வட்டத்தில். அமைந்து நிலைபெற்று உயரவும், சிறந்த தவமும் தருமமும் நீங்கிச் செல்லவும். பூரண கும்பத்தைச் சினந்து, குளிர்ச்சி பொருந்திய கலவைச் சாந்தை அணிந்து, காமச் சண்டையை விரும்பும் முலைகளை யுடைய மாதர்களின், போகப் படுக்கையினின்றும் விலகி உன் பொன் போன்ற செவ்விய திருமலரடிகளை வணங்கி வழிபட்டு வணங்கும் அடியேன் என்று சொல்வதாகிய, ஒரு நாள் ஏற்படுமோ?

தனம் போல் இல்லாமையால் யானை மத்தகம் தாழ்வடைந்தது என்றது குறித்தே வாரணமுகம் கிழிந்து விழவும் என்றார். தாமரை அரும்பு தனத்துக்கு ஒவ்வாமையால் மலர்ந்தது என்றார். இது தற்குறிப்பேற்றம். யானைத் தலை, தாமரை அரும்பு, மால்வரை, அனங்கன் முடி, வாளகிரி, பூரண கும்பம் முதலியன முலைக்கு உவமைப் பொருள்கள்.