பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

13



எறுமயில் - ஆண் மயில்; இதனை

'துர் ரற்றையும் ஒருத்ததுங் கன%ர்

மாத்த ஆண்டார் யெரென பொது ” - என்னும் தொல்காப்பியம் - மரபியல் 558 - ஆம் நூற்பாவால் அறிக. சேயோன் தோகைமயில் வாகனர். ஆண் மயிற்கே தோகை.உண்டு ஆதலின் ஏறுமயில் என்றார்.

'விளையாடல் இங்கு ஐந்தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவற்றை, விளையாட் டென்றமையால் முருகன் இவ்வைந்தொழிலையும் களைப்பின்றி செய்தலைக் குறிப்பித்தார்.

துவகி விகா நிடை/”

என்ற கம்பர் வாக்கு ஈண்டுக் கருதற்பாலது. ஈச்ன் என்றது 'எல்லா ஜசுவரியத்தையும் உடையவனாகி நின்று அடியார்க்கு வேண்டிய வேண்டியாங்குத் தந்தருள் செய்யும் தலைவன் என்பது பொருள் இதனை வடமொழிச் சொல் என்பர்.

"ஞான் மொழி என்றது ஒம் பிரணவப் பொருளை, முருகப் பெருமான் தன்னை இளையன் என்று எண்ணிய பிரமன் செருக்கை அடக்கப் பிரணவப் பொருளைக் கேட்டபோது, வாய் திறக்கும் வன்மை இன்றி வாளாவிருந்த வேதனைக் குட்டிச் சிறையிலிட்டார். நான்முகனுக்காகப் பரிந்து வந்த தந்தையாகிய் சிவபெருமான். பிரணவப் பொருள் கேட்க, இறைவர்க்குக் குருவாக இருந்து அவர் நின்று செவி சாய்த்துக் கேட்க ஒகி யருளிய திறம் விளங்க, ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் என்றார்.

"உழன்பதில் கட்ட துகை பெருமான்

வணங்கிரீன் ரத்தக் குருமொழி வைத்தோப்' என்ற கல்லாட அடிகளாலும் இதனை அறியலாம்.