பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



புகழ்ந்து கூறுவோர்கள் எல்லோருக்கும், அவரவர்கள் மனத்திலே எண்ணுகின்றவை எல்லாவற்றையும் அருள் செய்பவனே! ஏழ்வகை இசை பேதங்களோடு கூடிய தமிழ்ப் பாட்டுக்களால் பயன் கொண்டு, வெண்ணாவல் மரத்தை விரும்பி அதனடியில் கோயில் கொண்டிருக்கும், நன்மை மிகுந்த ஈச்சுரனும், மூன்று கண்களை உடையவரும், நடனம் புரிவோருமாகிய சிவபெருமான், பெற்றருளிய பெருமானே நஞ்ச பொருந்திய கண்களை உடையவரும், மன்ம ஊடல்கூடல் கலைகளை எல்லாங் கற்றறிந்த திறத்தை உடையவர்களும். எப்படிப்பட்டோர் நெஞ்சத்தையும் ஏமாற்றித் தங்கள் வசப்படுத்திக் கொள்வோரும், தெரு நடுவில் முத்துமாலை தரித்த வட்டமான முலைகளுக்கு விலையாகப் பணத்தை ஆயிரங் கலங்களாக கொட்டிக் கொட்டி அளந்தாலும், ஆசை அவர்கள் தந்த அந்தப் பொருள்களுக்குத் தகுந்தபடி, கபட நாடகஞ் செய்கின்ற விலை மாதர்களினிடம் காம மயக்கங்கொண்டு, தேக இளைப்பும், இழுப்பும், வேதனைகளும் ஏற்பட்டு, அதற்கு மேலும் உண்டாகிய இருமலோடு பித்தமும் அதிகப்பட தலையிலே எழுதிய விதியின்படியே, இந்த மண்ணிலே உனது அடியவன் என்று பற்பல வகையான துன்பங்களையும் நுகர்ந்து புழுக்கள் செறிந்த மலைக்குகையாகிய, தேகமாகிய இந்த வீட்டைக் கட்டியிருக்கின்ற அடியவனாகிய எனக்கு, தேவரீருடைய திரு அருளை தந்தருள்வீராக. - -

ஆலம் வைத்த விழிச்சிகள் நஞ்சந் தோய்ந்த நயனத்தார். என்பது பொருள். இதனால் அன்றோ அம்பிகாபதியும்,

%ரவு - - - .

என்றார்.