பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் <> 177

வளர்நி சாசரர் தங்களிசி ரம்பொடி

படவி ரோதம் இடுங்குல சம்ப்ரம மகர வாரிக டைந்தநெ டும்புயல் மருகோனே!

வளரும் வாழையும் இஞ்சியு மஞ்சளும்

இடைவி டாதுநெ ருங்கிய மங்கள - மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே!

இளகி, வளர்கின்ற சந்தனத்தையும் குங்குமத்தையும் கலவைச் சாந்தையும் பூசியுள்ள நிறைவாகிய தனங்களின் நன்மையைக் கொண்ட இரதியின் கணவனாகிய மன்மதன், வணங்கும்படியான தந்தையும் மன்மதனின் தந்தையாகிய, திருமாலும், அழகிய தண்ணருளை உடைய பிரமதேவனும், இன்பத்தடையாது துன்பப்படவும் பகைவர்களை எதிர்கின்ற தேவேந்திரனும் தேவர்களும், அரகரா சிவசங்கரா சங்கார என்று அஞ்சி ஒலமிட்டுக் கூறும்படி மேலே ஓங்கிப் பொங்கி வரும் ஆலகாலவிடத்தை அத்தேவர்கள் உய்யுமாறு அமுது செய்தருளும் சிவபெருமான் பெற்றருளிய திருப்புத்திரனாகிய முருகக் கடவுளே! மேன்மேலும் துன்மார்க்கத்தில் வளர்ந்து கொண்டுவரும் அசுரர்களின், தலைகள் நீறாகும்படி பகை பாராட்டுகின்ற குலத்தின் பெருமை உடையவனும், சுறவு மிகுந்த நீண்ட கடலைக் கடைந்த நீண்ட உருவம் திரிவிக்கிரம அவதாரம் கொண்ட நீர் கொண்ட மேகம்போலும் திருமாலின் மருமகனே! கொழுமை கொண்டு சீக்கிரம் வளரும் இயல்புடைய வாழை மரங்களும், இஞ்சியும், மஞ்சட்கிழங்கும். சற்றும் இடமின்றி அடர்ந்து வளர்ந்துள்ள நலம்பல கொண்ட பெருமையை உடைய சிறந்த நகரமாகிய திருச்செந்தூர் என்னும் திருப்பதியில் வந்து பொருந்தி வீற்றிருக்கும் பெருமானே கூந்தல்சுமை, அலைந்து சோர்தரவும் முகத்திலே, வேர்வை விளங்கி அழகு சிந்தவும். பரவசமாகும் மோகம் உண்டாகி, கட்ட படுக்கையின் மேலே, சிவந்த வாயினால் முறுவலை மிகுதியாகச் செய்யும்,