பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த கோவேந்தன், டி லிட் を 77

கொடிய பெண்களினுடைய, அழகு நிறைந்த, தனங்களாகிய நல்ல புழுகு நிறைந்த வெற்புகளில் கூடிப் பலம் அழிந்து சரீரம் தாழ்வடைந்து இருமி, தள்ளாட்ட நடையிலே புகுந்து சொல்லற்று அறிவுகெட்டு, மெலிந்து போய், மனமுடைந்து உயிரானது சோர்வடையும்படி, நெருப்புப் பொருந்திய நரகத்திலே நான் விழாதபடிக்கு, உன்னுடைய இரண்டு திருவடிகளையும், அடியவனாகிய எனக்குத் தந்தருள்வாயாக.

உருவில்லாதவன் ஆதலின், எவராலும் காணற்கரிய மன்மதன் என்ற பொருளில் அருமா மதன் என்றார். அயிலார் - வேலை ஒத்த கண், காமக் கூரமைந்த கண் எனினும் ஆம் கொடியர் - வஞ்சிக் கொடி பூங்கொடி மின்னற்கொடி போல்வார் என்பது பொருள். கொடி போல்வாரைக் கொடி என்றது உவமை ஆகுபெயர் கொடியார் லி கொடியவர் என்ற பொருளும் ஆம் ஈங்கு இருபொருள் தரச் சிலேடையாகக் கூறினார்.

பெண்க்ள் காதல் நரகம் தரும் என்றதனால், வலி கெட்டுஎரிவாய் நரகிற் புகாதபடிக்கு என்றார். இதனை,

தாத் .خټ s தச் சொல்வி 75 # *

தான்த்தனத்தத்தைப் தம்நீர் பீர்” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.

அணையா, புகுதா செய்யா என்னும் வாய்ப்பாட்டு

விளையெச்சங்கள்,

மால் பிரமர் கண்ணாற் காணற்கு அரிய சிவபெருமான் மகனே கிரவுஞ்சம் பிளக்க வேல் விட்ட வீரனே! நான் மாதர் போகத்தில் மூழ்கித் தேக வலி கெட்டு நரகத்திற்குப் போகாதபடி நின் இரு மலர்த்தாள் தந்தருள்க' என்று வேண்டுகின்றார்.