பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

த. கோவேந்தன், டி லிட் & 179

கதாயுதத்தை நீங்காது சார்த்தி வைக்கப்பெற்ற தோள்களையுடைய வீமனானவன், தன்னை எதிர்த்து வருகின்ற கணைகளைக் கொண்டே, வன்மை மிகுந்த சத்துருக்களின் பெருங்கூட்டம் நீறாக அழியச்செய்யும் போர்க்களத்தில் தன் கன்றை நினைத்துக் கதறுகின்ற பசுக்கள், தத்தம் இடங்களில் போய்ச் சேரவும், அருச்சுனன் ஏறும்படியான தேரின் மேலே இருந்துகொண்டு. பொன் மயமான மறை முறையே துதிக்கும் சங்கை வாய் வைத்து ஊதி அலைகள் மோதுகின்ற, கடலின்மேல் படுத்துக் கிடக்கும் உலகத்தை அளந்து மூடிய, சிறந்த திருப்பாதங்களை உடைய, கருட வர்கனராகிய திருமாலின் மருமகனே அழிவின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்ற தேவர்களது நாயகனே பாதாள லோகத்தில் உள்ள ஆதிசேடன் ஆடவும். அனைத்துலகும் மகாமேரு மலையும் மிகவும் ஆடவும், வேறுபாடில்லாத காளிகாதேவி ஆடவும். அக் காளிகா தேவியோடு அந்நாளில், அனைத்து அண்டங்களும் அதிரும்படி தோள்களை வீசி. காளிகா தேவிக்காக வாது செய்து ஆடும் எருது வாகனருடராகிய சிவபெருமான் ஆடவும். அவர் அருகில் பூதங்களும் வேதாளங்களும் ஆடவும், இனிமை வாய்ந்த கலைமகளும் தான்ாடவும், உந்தித் தாமரையிலே உள்ளவனாகிய நான்முகன் ஆடவும், வானுலகத்தில் பொருந்தி உள்ளோர்கள் எல்லோரும் ஆடவும், நிலவு ஆடவும். தாமரை மலரில் வசிக்கும் மாமியாகிய திருமால் ஆடவும், மாமனாராகிய சிறந்த நெடுமால் ஆடவும், எழுகதிரை ஒத்து ஒளிர்கின்ற மாலைகளைப் பூண்டுள்ள மார்பையுடைய திருவண்ணா மலையை ஆண்டு வந்த பிரபுதேவன் என்னும் பெரிய அரசனின் உள்ளமுங் களிப்படையும்படி, மயில் ஆடுவதோடு நீயும் ஆடிக் கொண்டு. வந்து அருள் செய்ய வேண்டும்.