பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



அதலம் - பாதாள லோகம் கீழுள்ள ஏழலகங்களில் ஒன்று சேடன் - சர்வ பிரளயகாலத்தும் மீந்திருப்பவன்' என்ற பொருளில் வந்தது. நாரணர்க்கு அணையாக அமைந்தபடியால் அழிவில்லாததுவாகி மீந்திருப்பது என்றறிக. பின்னம் - பிரிவு. அபின்னம் - பிரிவின்மை அகரம் எதிர்மறை, வீசி வாதாடும் என்றதற்குத் தோள்களை வீசி என்றாம்.

7ண்டோன் விதின் தரநிர் பிரனைத் தவையே உணங்க

என்ற திருவங்கமாலையை நோக்குக.

திருமாலுக்கு மருமகன் ஆதலால், திருமகளை "வனசமாமியாராட என்றார். இதனை.

கேடினதத்தைசெம் கேனியெரை மட22 ட/கப் உாகனத்தை வேண்டிடுாே ட/வைதான்் - சாக வி தான் உதுபுத் தண்Zது? கருதுக7 மாலத் தாரகுன வா' என்ற வெண்பாவாலும் அறிக.

கதையையுடைய வீமன் தன்னை எதிர்த்த சத்துருக்கள் எய்யும் அம்பைக்கொண்டே அவர்களை அழிப்பானாம். இதனை, கதைவிடா - மா சேனே பொடியாக என்றார். பிரபுடமா தேவன். அருணகிரியார் காலத்து இருந்த அரசன் அருணகிரியாரை ஆதரித்தவன்.

"உலகையே ஒரடியால் அளந்த மாயன் மருமகனே! ஆடு மயிலாட நீயாடி வந்தருள வேண்டும்" என்றார். ஆட்டத்தால் பஞ்ச கிருத்தியமும் நடைபெறுதலின், இறைவரும் முருகரும் அபேதம் ஆதலின் இவ்வாறு கூறினார். இதனை, -